பொது செய்தி

தமிழ்நாடு

கிரைம் செய்திகள்...

Added : செப் 06, 2021
Share
Advertisement
வாகனம் மோதி மூதாட்டி பலிதிருவெண்ணெய்நல்லுார்: அரசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி மனைவி பஞ்சவர்ணம், 75; இவர், நேற்று அதிகாலை 2:00 மணியளவில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அரசூர் ஆற்று மேம்பாலத்தில் அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. படுகாயமடைந்த பஞ்சவர்ணம் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

வாகனம் மோதி மூதாட்டி பலி
திருவெண்ணெய்நல்லுார்: அரசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி மனைவி பஞ்சவர்ணம், 75; இவர், நேற்று அதிகாலை 2:00 மணியளவில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அரசூர் ஆற்று மேம்பாலத்தில் அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. படுகாயமடைந்த பஞ்சவர்ணம் சம்பவ இடத்திலேயே இறந்தார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
உண்டியல் உடைத்து திருட்டு
திண்டிவனம்: ஒலக்கூர் அடுத்த பாதிரி அய்யனாரப்பன் கோவிலில், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் பூசாரியாக உள்ளார். இவர், நேற்று காலை, கோவிலுக்குச் சென்று பார்த்தபோது, கோவில் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே உண்டியல் உடைத்து, காணிக்கை திருடு போயிருப்பது தெரியவந்தது. புகாரின் பேரில், ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மகள் மாயம்: தந்தை புகார்
கள்ளக்குறிச்சி: சிறுவங்கூரைச் சேர்ந்தவர் சண்முகம் மகள் ருத்ரா,19; தனியார் கல்லுாரியில் மூன்றாமாண்டு பொறியியல் படித்து வருகிறார். இவரை கடந்த 3ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. சண்முகம் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.முன்விரோதம்: 4 பேர் மீது வழக்குசின்னசேலம்: பாண்டியன்குப்பம், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கருப்பன் மகன் லோகநாதன், 24; இவர், அதே ஊரில் பாஸ்ட் புட் கடை வைத்துள்ளார். கடந்த 3ம் தேதி அதே ஊரைச்சேர்ந்த கார்த்திக், 27; என்பவர், லோகநாதன் கடையில் சாப்பிட்டுள்ளார். சாப்பாடு சரியில்லை எனக்கூறி தகராறு செய்தார்.

இந்நிலையில் மறுநாள் 4ம் தேதி மீண்டும் கடைக்கு வந்த கார்த்திக் மற்றும் கருப்பண்ணன், சக்திவேல், சோலைமுத்து ஆகிய நால்வரும் லோகநாதனை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் கார்த்திக், கருப்பண்ணன், சக்திவேல் மற்றும் சோலைமுத்து ஆகிய நான்கு பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X