அரசியல் செய்தி

தமிழ்நாடு

'கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகளை அதிகம் திறங்க!': ராமதாஸ்

Added : செப் 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை-'கலை கல்லுாரி மாணவர்களுக்கான விடுதிகளை அதிகம் திறக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: தமிழகத்தில் மொத்தமுள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை நடைமுறைகள் ஜூலை 27ல் துவங்கி நடந்து வருகின்றன. அனைத்து கல்லுாரிகளிலும் சராசரியாக 90 சதவீத இடங்கள் நிரம்பி விட்டன; மீதமுள்ள இடங்களும் அடுத்த சில நாட்களில்
 'கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகளை அதிகம் திறங்க!': ராமதாஸ்

சென்னை-'கலை கல்லுாரி மாணவர்களுக்கான விடுதிகளை அதிகம் திறக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: தமிழகத்தில் மொத்தமுள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை நடைமுறைகள் ஜூலை 27ல் துவங்கி நடந்து வருகின்றன. அனைத்து கல்லுாரிகளிலும் சராசரியாக 90 சதவீத இடங்கள் நிரம்பி விட்டன; மீதமுள்ள இடங்களும் அடுத்த சில நாட்களில் நிரப்பப்பட்டு விடும்.கல்லுாரிகளில் முதலாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்கப்பட்டு விட்டன.

ஆனால், பெரும்பான்மையான மாணவர்களுக்கு விடுதிகளில் இடம் கிடைக்காததால், அவர்களால் வகுப்புகளுக்கு செல்ல முடியவில்லை.கல்லுாரிகள் கிராமங்களிலும், விடுதிகள் நகரங்களிலும் உள்ளன. வேறு சில விடுதிகள் கல்லுாரிகளுக்கு அருகில் அமைந்திருந்தாலும், கல்லுாரியும், விடுதியும் வேறு வேறு மாவட்டங்களில் இருப்பதாகக் கூறி, விடுதிகளில் இடம் மறுக்கப்படுகிறது.

மாவட்ட எல்லைகள் குறித்த நிபந்தனைகளை தளர்த்தி, எந்த அரசு கல்லுாரி மாணவரையும், எந்த விடுதியிலும் சேர்க்கலாம் என, தமிழக அரசு அறிவித்தால், இந்த சிக்கலை 70 சதவீதம் தீர்த்து விடலாம். அருகில் விடுதிகளே இல்லாத கல்லுாரிகளில் பயிலும் மாணவர்களை, தற்காலிக ஏற்பாடாக அருகிலுள்ள தனியார் விடுதிகளில் சேர்க்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய கல்லுாரிகளை கணக்கெடுத்து, அவற்றுக்கு அருகில் புதிய மாணவர் விடுதிகளை அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
06-செப்-202105:53:13 IST Report Abuse
Kasimani Baskaran 2021 முடியும் வரையாவது விடுதிகளை திறக்காமல் இருப்பது நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X