அரசியல் செய்தி

தமிழ்நாடு

விரைவில் 'பாங்க் ஆப் தமிழ்நாடு' ; ராஜ்யசபா எம்.பி., அப்துல்லா தகவல்

Added : செப் 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுக்கோட்டை-''தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள், 'பாங்க் ஆப் தமிழ்நாடு' துவங்கப்பட உள்ளது,'' என, ராஜ்யசபா எம்.பி., அப்துல்லா தெரிவித்தார்.ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட அப்துல்லா, நேற்று புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க., அலுவலகத்திற்கு வந்தார். அங்கு கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து, தி.மு.க., நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து

புதுக்கோட்டை-''தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள், 'பாங்க் ஆப் தமிழ்நாடு' துவங்கப்பட உள்ளது,'' என, ராஜ்யசபா எம்.பி., அப்துல்லா தெரிவித்தார்.

ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட அப்துல்லா, நேற்று புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க., அலுவலகத்திற்கு வந்தார். அங்கு கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து, தி.மு.க., நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்துல்லா கூறியதாவது:பார்லிமென்டில் எந்த விஷயத்தை கையில் எடுக்க வேண்டும், எப்படி செயலாற்ற வேண்டும் என, கட்சித் தலைமை உத்தரவிடுகிறதோ, அது என்னுடைய குரலாக எதிரொலிக்கும்.

வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக ஒரு தனித் துறையை உருவாக்குவோம் என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியதை செயல்படுத்துவதற்கான குரலாக இருக்கும். வெளிநாடு வாழ் தமிழர்களின் பிரச்னைகளை மத்திய அரசின் வாயிலாக தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன். பாங்க் ஆப் தமிழ்நாடு குறித்து இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் பாங்க் ஆப் தமிழ்நாடு துவங்கப்படும்.அதற்கு முன், 'பேமென்ட் பாங்க்' விரைவில் துவங்கப்பட உள்ளது. இந்த வங்கியில், தமிழக அரசு தான் பங்குதாரராக இருக்கும். இது ஒரு, 'ஷெட்யூல்டு பாங்க்'. மற்ற வங்கிகளில் முதலீடு செய்யும் தமிழர்கள், 'பாங்க் ஆப் தமிழ்நாடு' வங்கியில் முதலீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
06-செப்-202108:25:21 IST Report Abuse
ஆரூர் ரங் வட்டி வாங்குதல் கொடுத்தல் தவறு எனும் மூர்க்கம் எப்படி 🥲வங்கி நடத்த விடும்,? அரசியல் சட்டப்படி மாநில அரசுகள் வங்கி நடத்த முடியாதுஎன்பதுதெரியாதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X