அரசியல் செய்தி

தமிழ்நாடு

நான் நலமுடன் உள்ளேன்: விஜயகாந்த்

Added : செப் 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை--'நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன்; சிகிச்சைக்கு உதவும் செவிலியர்களுடன் சத்ரியன் திரைப்படம் பார்த்தேன்' என, துபாயில் சிகிச்சை பெற்று வரும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், மருத்துவ பரிசோதனைக்காக ஆக., 30ல் துபாய் சென்றார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. லண்டனில் உள்ள ஒரு பிரபல மருத்துவர்
 நான் நலமுடன் உள்ளேன்: விஜயகாந்த்

சென்னை--'நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன்; சிகிச்சைக்கு உதவும் செவிலியர்களுடன் சத்ரியன் திரைப்படம் பார்த்தேன்' என, துபாயில் சிகிச்சை பெற்று வரும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், மருத்துவ பரிசோதனைக்காக ஆக., 30ல் துபாய் சென்றார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. லண்டனில் உள்ள ஒரு பிரபல மருத்துவர் துபாய் வந்து, விஜயகாந்திற்கு நடைபயிற்சி மற்றும் பேச்சு பயிற்சி கொடுத்து வருகிறார்.விஜயகாந்துடன் அவரது இளைய மகன் சண்முக பாண்டியன், அவரது உதவியாளர்கள் உடன் சென்றனர். கணவரைப் பார்க்க இம்மாதம் 4ம் தேதி பிரேமலதா துபாய் சென்றார்.

இந்நிலையில், சிகிச்சைக்கு உதவும் செவிலியர்களுடன் உள்ள புகைப்படத்தை, தன் முகநுால் பக்கத்தில் விஜயகாந்த் நேற்று வெளியிட்டார்.அதில், 'நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த சத்ரியன் திரைப்படத்தை, என் சிகிச்சைக்கு உதவி புரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்தேன்' என பதிவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
07-செப்-202103:39:52 IST Report Abuse
meenakshisundaram அண்ணி பிரேமா லதா அவர்களே ,அண்ணனை கொஞ்சம் உண்மையிலேயே நல்ல படி கவனிச்சுக்குங்க .பதவி ஆசை எல்லாம் வேண்டாம் ஊர்வலமும் அவரை வச்சு இன்னும் நடத்த வேண்டாம் .தேர்தல் வந்தால் திமுக எப்படியும்ம் ஏதோ ஒரு 'தொகை 'கொடுப்பாங்க அதுவே போதும் . அன்றாட அரசியலில் விஜயகாந்தை இழுத்து அவரின் தற்காலம் மாற்று பின் வரும் காலங்கலில் அவர் கொஞ்சம் நிம்மதியாக இருக்கட்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X