பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

Added : செப் 06, 2021
Share
விழுப்புரம் : உள்ளாட்சித் தேர்தலையொட்டி, கோலியனுாரில் ஒன்றிய பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, மத்திய மாவட்ட செயலாளர் புகழேந்தி தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் சிவக்குமார் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் ஸ்டாலின், சந்தோஷ், குழந்தைவேல், எழிலரசன், வேல்முருகன் முன்னிலை வகித்தனர். மாநில துணை பொதுச் செயலாளர் தங்கஜோதி, துணை அமைப்புச் செயலாளர்
 பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரம் : உள்ளாட்சித் தேர்தலையொட்டி, கோலியனுாரில் ஒன்றிய பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு, மத்திய மாவட்ட செயலாளர் புகழேந்தி தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் சிவக்குமார் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் ஸ்டாலின், சந்தோஷ், குழந்தைவேல், எழிலரசன், வேல்முருகன் முன்னிலை வகித்தனர். மாநில துணை பொதுச் செயலாளர் தங்கஜோதி, துணை அமைப்புச் செயலாளர் பழனிவேல், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் புண்ணியகோடி சிறப்புரையாற்றினர்.

மாநில செயற்குழு ராஜேந்திரன், மாணவரணி துணைச் செயலாளர் பெருமாள், மாவட்ட தொண்டரணி செயலாளர் தமிழ், இளைஞர் சங்க அமைப்பு செயலாளர் ஞானவேல், வன்னியர் சங்க ஒன்றிய செயலாளர் புண்ணியமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க., நிர்வாகிகள் வெற்றிக்காக களப்பணி ஆற்றுவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X