பொது செய்தி

தமிழ்நாடு

இலவச கண் பரிசோதனை முகாம்

Added : செப் 06, 2021
Share
Advertisement
திருத்தணி : சிவாடா அரசு உயர்நிலைப் பள்ளியில், நேற்று நடந்த இலவச கண் பரிசோதனை முகாமில், 192 பேர் பங்கேற்றனர். இதில், 107 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.திருவாலங்காடு ஒன்றியம், சிவாடா கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், ஜலதி அறக்கட்டளை, திருவள்ளூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து,
இலவச கண் பரிசோதனை முகாம்

திருத்தணி : சிவாடா அரசு உயர்நிலைப் பள்ளியில், நேற்று நடந்த இலவச கண் பரிசோதனை முகாமில், 192 பேர் பங்கேற்றனர்.

இதில், 107 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.திருவாலங்காடு ஒன்றியம், சிவாடா கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், ஜலதி அறக்கட்டளை, திருவள்ளூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து, இலவச கண் பரிசோதனை முகாம் நேற்று நடத்தினர்.

முகாமை, ஜலதி அறக்கட்டளை சேர்மன் உமாசங்கர் துவக்கி வைத்தார். இதில், 20 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் பங்கேற்று சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கினர்.முகாமில் மொத்தம், 192 பேருக்கு கண், சர்க்கரை நோய் ஆகிய பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கினர்.மேலும், இதில் 107 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களை, இரண்டு அரசு பஸ்கள் மற்றும் ஒரு வேன் மூலம் சென்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X