பொது செய்தி

தமிழ்நாடு

சுகாதாரத் துறையினர் கள ஆய்வு

Added : செப் 06, 2021
Share
Advertisement
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து சுகாதாரத் துறையினர் வீடு வீடாகச் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.உளுந்துார்பேட்டை அடுத்த பு.கொணலவாடியில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் காய்ச்சல், சளி, இருமலால் பாதிக்கப்பட்டனர்.இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக ஆரம்ப சுகாதார நிலைய

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து சுகாதாரத் துறையினர் வீடு வீடாகச் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த பு.கொணலவாடியில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் காய்ச்சல், சளி, இருமலால் பாதிக்கப்பட்டனர்.இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஸ்ரீதர் தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர் பிச்சமுத்து, சுகாதார ஆய்வாளர்கள் ரவி, முருகன் மற்றும் சுகாதாரத் துறையினர் நேற்று மதியம் 1:00 மணியளவில் பு.கொணலவாடி கிராமத்திற்குச் சென்றனர்.

அங்கு, மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை வீடு வீடாகச் சென்று சுகாதாரத் துறையினர் கள ஆய்வு செய்து கேட்டறிந்தனர். அதன்பேரில் அக்கிராமத்தில் மருத்துவக் குழுவினர் இன்று முகாமிட்டு சிகிச்சை அளிக்க உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X