பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து விதி மீறல் அபராதம் ரூ.19.44 லட்சம்

Added : செப் 06, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் வட்டார போக்குவரத்துத் துறை சார்பில் கடந்த மாதம் அனுமதிச் சீட்டு இன்றி இயங்கிய வாகனங்கள், வரி செலுத்தாதது உட்பட பல்வேறு போக்குவரத்து விதிமீறிய வாகனங்கள் மூலம் 19 லட்சத்து 44 ஆயிரத்து 360 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் சென்னை, திருச்சி மற்றும் தென்மார்க்கங்களைச் சேர்ந்த வாகனங்களின் தரைவழி போக்குவரத்திற்கு விழுப்புரம் மாவட்டத்தில்

விழுப்புரம் : விழுப்புரம் வட்டார போக்குவரத்துத் துறை சார்பில் கடந்த மாதம் அனுமதிச் சீட்டு இன்றி இயங்கிய வாகனங்கள், வரி செலுத்தாதது உட்பட பல்வேறு போக்குவரத்து விதிமீறிய வாகனங்கள் மூலம் 19 லட்சத்து 44 ஆயிரத்து 360 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, திருச்சி மற்றும் தென்மார்க்கங்களைச் சேர்ந்த வாகனங்களின் தரைவழி போக்குவரத்திற்கு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இம்மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும், கனரக வாகனங்கள் உட்பட பல வாகனங்கள் பல்லாயிரக்கணக்கில் செல்கின்றன.இந்த வாகனங்கள் அனைத்தும் அரசின் போக்குவரத்து விதிமுறைகளுக்கு உட்பட்டு செல்கிறதா என்பதை வட்டார போக்குவரத்துத் துறை மற்றும் போக்குவரத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.கொரோனா தொற்று ஊரடங்கையொட்டி, சில மாதங்களாக வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விதிமுறை மீறும் வாகனங்களை கண்காணிக்கும் பணிகளை நிறுத்தி வைத்திருந்தனர்.

தற்போது ஊரடங்கில் அரசு தளர்வு ஏற்படுத்தி, அனைத்து மாவட்ட, மாநில வாகனங்கள் தடையின்றி செல்ல அனுமதி வழங்கியதையொட்டி, வட்டார போக்குவரத்துத் துறை அலுவலர்கள் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.விழுப்புரம் வட்டார போக்குவரத்துத் துறை கட்டுப்பாட்டில் வாகன விதிகளை மீறுவோர் கண்காணிக்கும் எல்லைப் பகுதி விழுப்புரம், விக்கிரவாண்டி, அரசூர், வளவனுார், கண்டமங்கலம், திருக்கோவிலுார் உட்பட 25 கி.மீ., சுற்றளவு உள்ளது.

விழுப்புரம் சரக துணை போக்குவரத்து கமிஷனர் நெல்லையப்பன் உத்தரவின் பேரில், வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், கோவிந்தராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி டோல்பிளாசா உட்பட பல பகுதிகளில் வாகன விதிமுறை மீறுவோரை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.அதில், வாகன அனுமதிச் சீட்டு இல்லாமல் இயக்கியது. வரி செலுத்தாத வாகனம், ஓட்டுநர் உரிமம் இல்லாதது, அதிகபாரம் ஏற்றுதல், காப்பீட்டு சான்று இல்லாதது,

வெளிமாநில வாகனம் உட்பட விதிமுறை மீறிய 37 வாகனங்கள் கண்டறியப்பட்டது.இதில், 25 வாகனங்கள் வரிசெலுத்தாமல் இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்து, அதற்கு வரியாக மட்டும் 5 லட்சத்து 82 ஆயிரத்து 760 ரூபாய் வசூலித்துள்ளனர்.அது மட்டுமின்றி விதிமுறை மீறி இயங்கிய வாகனங்களுக்கு உடனடி அபராத தொகையாக 3 லட்சத்து 66 ஆயிரத்து 600 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.மேலும், விதிமுறை மீறிய வாகன ஓட்டிகள் அவரவர் பகுதிகளில் அபராத தொகையை செலுத்துவதற்காக மொத்தம் 9 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது.இந்த, வரி வசூல் மற்றும் அபராத தொகைகள் மூலம் மொத்தம் 19 லட்சத்து 44 ஆயிரத்து 360 ரூபாய் வசூலிக்கப்பட்டு, அரசு கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X