பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்..

Added : செப் 06, 2021
Share
Advertisement
இன்று தரிசனம் ரத்துதிருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக, பிரதான கோவில்களில் மக்கள் அதிக அளவில் கூட, அரசு தடை விதித்து உள்ளது.இன்று அமாவாசை தினம் என்பதால், திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்து, சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.அரசின் உத்தரவு காரணமாக, வீரராகவர் கோவிலில் இன்று பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி இல்லை என,

இன்று தரிசனம் ரத்து
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக, பிரதான கோவில்களில் மக்கள் அதிக அளவில் கூட, அரசு தடை விதித்து உள்ளது.


இன்று அமாவாசை தினம் என்பதால், திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்து, சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.அரசின் உத்தரவு காரணமாக, வீரராகவர் கோவிலில் இன்று பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி இல்லை என, கோவில் தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

சித்தர் குருபூஜை
மாமல்லபுரம்: மயிலாடுதுறை, ஓங்கார பீட சற்குரு சித்தர் சுவாமியின், 58வது குரு பூஜை விழா, கல்பாக்கம் - புதுப்பட்டினத்தில் ஞானசித்தர் ஆலயத்தில், நேற்று நடந்தது.


இதை முன்னிட்டு, காலை, மஹா தீபம் ஏற்றி, அகண்ட நாமாவளி அர்ச்சனை, சிவ பஞ்சாட்சரம் உச்சரித்து, தியானித்து, 60 படிகளுக்கு பூஜை, மங்கள ஆரத்தி வழிபாடு நடந்தது. அதை தொடர்ந்து, சிவஜோதி தரிசனம், உச்சிகால வழிபாடு நடந்து, அருளுரை நிகழ்த்தப்பட்டது.அம்மன் ஜாத்திரைஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டையில் நேற்று மாலை, கிராம எல்லையில் சிறப்பு பூஜையுடன், அம்மன் ஜாத்திரை துவங்கியது. நாளை இரவு அம்மனுக்கு கும்பம் படைக்கப்படுகிறது.

இதையொட்டி, பெண்கள் நேற்று, தங்களின் விரதத்தை துவக்கினர். நாளை இரவு, அம்மனுக்கு கும்பம் படைக்கும் வரை தங்களின் விரதத்தை தொடர்கின்றனர்.இதையொட்டி, இந்த மூன்று நாட்களும் அம்மனுக்கு மாவிளக்கு பூஜை செய்ய உள்ளனர். நாளை மறுதினம் காலை, கங்கையம்மன், நீர்நிலையில் கரைக்கப்படுகிறார்.

நெல் கொள்முதல் நிலையம் துவக்கம்
ஊத்துக்கோட்டை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில், ஊத்துக்கோட்டையில் நேரடி நெல் கொள்முதல் நிலைய ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் திறப்பு விழா நடந்தது. வாணிபக் கழக மண்டல மேலாளர் சுமித்ரா தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ., கோவிந்தராஜன் பங்கேற்று திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில், 'விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு எல்லாபுரம், பூண்டி ஆகிய ஒன்றியங்களில் மேலும் மூன்று நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X