சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.20 லட்சம் கள்ள நோட்டு பறிமுதல்: இருவர் கைது

Added : செப் 06, 2021
Share
Advertisement
உத்தமபாளையம்-உத்தமபாளையம் அருகே ஆட்டோ டிரைவர் வீட்டில் போலீசார் சோதனையில் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே வெள்ளக்கரட்டில் வசிப்பவர் அலெக்சாண்டர், 45. ஆட்டோ ஓட்டி வருகிறார். அடிக்கடி சென்னை, பெங்களுர் சென்று வந்தார். 'ஆன்லைனில் கட்டிங் மிஷின்' வாங்கியுள்ளார்.

உத்தமபாளையம்-உத்தமபாளையம் அருகே ஆட்டோ டிரைவர் வீட்டில் போலீசார் சோதனையில் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இருவரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே வெள்ளக்கரட்டில் வசிப்பவர் அலெக்சாண்டர், 45. ஆட்டோ ஓட்டி வருகிறார். அடிக்கடி சென்னை, பெங்களுர் சென்று வந்தார். 'ஆன்லைனில் கட்டிங் மிஷின்' வாங்கியுள்ளார். இவரின் ஆடம்பரமான வாழ்க்கையை போலீசார் சந்தேகித்து கண்காணித்தனர். நேற்று அதிகாலை 4:00 மணிக்கு அலெக்சாண்டர் வீட்டிற்குள் எஸ்.ஐ., மாயன் தலைமையிலான போலீசார் சென்று சோதனையிட்டனர்.

அங்கு 2,000, ரூபாய், 500 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தன. 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில், கம்பம் தினகரன் நகரை சேர்ந்த கண்ணன், 40, கைது செய்யப்பட்டார். இவர்களுக்கு கோவையை சேர்ந்த ஒருவர் கள்ள நோட்டுக்களை கொடுத்ததாக கூறினர். கள்ள நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்ட ரகசிய இடம் எது என, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X