அரசியல் செய்தி

தமிழ்நாடு

பரிந்துரைக்கு வர வேண்டாம்; 'நோட்டீஸ்' ஒட்டிய அமைச்சர்

Added : செப் 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுக்கோட்டை,-'நீதிமன்ற பணியாளர்கள் நியமனம் தொடர்பாக, பரிந்துரை கடிதம் கோரி யாரும் வர வேண்டாம்,' என சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் வீட்டு வாசலில் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள கீழ்மை நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், நகல் பிரிவு அலுவலர், சுகாதாரப் பணியாளர், துப்புரவுப் பணியாளர், தோட்டக்காரர், தண்ணீர் ஊற்றுபவர், காவலாளி போன்ற
 பரிந்துரைக்கு வர வேண்டாம்;  'நோட்டீஸ்' ஒட்டிய அமைச்சர்

புதுக்கோட்டை,-'நீதிமன்ற பணியாளர்கள் நியமனம் தொடர்பாக, பரிந்துரை கடிதம் கோரி யாரும் வர வேண்டாம்,' என சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் வீட்டு வாசலில் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள கீழ்மை நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், நகல் பிரிவு அலுவலர், சுகாதாரப் பணியாளர், துப்புரவுப் பணியாளர், தோட்டக்காரர், தண்ணீர் ஊற்றுபவர், காவலாளி போன்ற பணியிடங்களுக்கு 3,557 பேரை தேர்வு செய்வதற்கு, கடந்த மாதம், எழுத்துத்தேர்வு நடந்தது. பல ஆயிரக்கணக்கானோர், இத்தேர்வை எழுதினர்.இந்நிலையில் சட்டத் துறை அமைச்சர் ரகுபதியிடம் பரிந்துரைக் கடிதம் பெற்று, நீதிமன்ற பணியாளர் வேலையை பெறுவதற்கு, நேரடியாகவும், கட்சி பிரமுகர்கள் சிபாரிசுடனும் பலர் முயற்சி செய்கின்றனர்

.'தன்னிடம் யாரும் பரிந்துரைக் கடிதம் கேட்டு வரவேண்டாம். நீதிபதிகளை உள்ளடக்கிய தேர்வுக் குழுவினரே, பணியாளர்களை தேர்வு செய்கின்றனர்' என, அமைச்சர் ரகுபதி தரப்பில் கூறப்பட்டது.புதுக்கோட்டை, கீழ 2-ம் வீதியில் உள்ள அமைச்சர் ரகுபதி வீட்டின் முன், 'உயர் நீதிமன்ற வேலை குறித்து, அமைச்சரை சந்திக்க யாரும் அணுக வேண்டாம்' என்ற அறிவிப்பும் ஒட்டப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
06-செப்-202102:04:56 IST Report Abuse
BASKAR TETCHANA சிபாரிசு கடிதம் கேட்டு யாரும் என் வீட்டுக்கு வர வேண்டாம். பந்தத்தோடு வருபவர்கள் மட்டும் என் உதவியாளிரிடம் முகவரி கேட்டு அங்கு வரவும். என் என்றால் எதிர்க்கட்சிகள் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி கொண்டு பார்க்கின்றனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X