அ.தி.மு.க., பிரமுகர் விருந்தில் பங்கேற்பு இரண்டு அதிகாரிகள் துாக்கியடிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., பிரமுகர் விருந்தில் பங்கேற்பு இரண்டு அதிகாரிகள் 'துாக்கியடிப்பு'

Added : செப் 06, 2021 | கருத்துகள் (1)
Share
சேலம்-அ.தி.மு.க., பிரமுகர் இல்ல கறி விருந்தில் பங்கேற்ற, வாழப்பாடி பேரூராட்சி இ.ஓ., மற்றும் சுகாதார ஆய்வாளர் துாக்கியடிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் மல்லிகா, 55. சுகாதார ஆய்வாளர் மணிகண்டன், 33. இவர்கள் கடந்த, 1ல் வாழப்பாடி, அ.தி.மு.க., நிர்வாகி ராமச்சந்திரன் வீட்டில் நடந்த காதணி விழா கறி விருந்தில் பங்கேற்றனர். அத்துடன் அரசு

சேலம்-அ.தி.மு.க., பிரமுகர் இல்ல கறி விருந்தில் பங்கேற்ற, வாழப்பாடி பேரூராட்சி இ.ஓ., மற்றும் சுகாதார ஆய்வாளர் துாக்கியடிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் மல்லிகா, 55. சுகாதார ஆய்வாளர் மணிகண்டன், 33. இவர்கள் கடந்த, 1ல் வாழப்பாடி, அ.தி.மு.க., நிர்வாகி ராமச்சந்திரன் வீட்டில் நடந்த காதணி விழா கறி விருந்தில் பங்கேற்றனர். அத்துடன் அரசு விழாக்களில் பங்கேற்காமல், அ.தி.மு.க., ஆதரவாளர் போல, வலம் வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து வாழப்பாடி பேரூராட்சி, தி.மு.க., பொருளாளர் கமல் ராஜா, முதல்வரின் தனிப்பிரிவு, உள்ளாட்சி அமைச்சருக்கு மனு அனுப்பினார். சேலம் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வெங்கடேசன், விசாரித்து அரசுக்கு அறிக்கை அளித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மல்லிகா, தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சிக்கும், மணிகண்டன், திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சிக்கும் மாற்றப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X