சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தெரு நாய்கள் சுட்டுக்கொலை

Added : செப் 06, 2021
Share
Advertisement
விழுப்புரம்-தெரு நாய்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கில் நரிக்குறவர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம், சாலாமேடு ஆயுதப்படைக் காவலர் குடியிருப்பு அருகே, நேற்று முன்தினம் பிற்பகல் 2:00 மணியளவில் வெடிச் சத்தம் கேட்டுஉள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது, இரண்டு நாய்களை நரிக்குறவர் ஒருவர் தன் நாட்டுத்

விழுப்புரம்-தெரு நாய்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கில் நரிக்குறவர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம், சாலாமேடு ஆயுதப்படைக் காவலர் குடியிருப்பு அருகே, நேற்று முன்தினம் பிற்பகல் 2:00 மணியளவில் வெடிச் சத்தம் கேட்டுஉள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது, இரண்டு நாய்களை நரிக்குறவர் ஒருவர் தன் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று வாகனத்தில் கொண்டு சென்றது தெரிந்தது.தகவலறிந்த வி.மருதுார் வி.ஏ.ஓ., உமாபதி, விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் விசாரணை நடத்தி, இருவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், சாலாமேடு ஆற்காடு நகரைச் சேர்ந்த கனகராஜ், 51, தன் வீட்டில் ஆடு, கோழிகளை வளர்த்து வருவதும், இந்த கோழிகளை தெருவில் சுற்றித்திரியும் நாய்கள் கடித்ததால், நரிக்குறவர் ராஜ்குமார், 35, என்பவரை அழைத்து வந்து, நாட்டுத் துப்பாக்கியால் இரண்டு தெரு நாய்களை சுட்டுக் கொன்று அப்பகுதியில் புதைத்தது தெரிந்தது.போலீசார், இருவரையும் கைது செய்து, ஒற்றைக் குழல் நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும், ராஜ்குமாரின் துப்பாக்கி உரிமத்தை ரத்து செய்ய எஸ்.பி., ஸ்ரீநாதா வழியாக கலெக்டருக்கு பரிந்துரை செய்துஉள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X