கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பூஜாரி கொலை வழக்குஜாமின் மனு தள்ளுபடி

Added : செப் 06, 2021
Share
Advertisement
மதுரை-திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் சுடலைமாட சுவாமி கோவில் உள்ளது. பூஜை, கடைகள் நடத்துவது, வருவாயை பங்கீடு செய்வதில் இருதரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது. இந்த விரோதத்தில் கோவில் பூஜாரி சிதம்பரம், 45, ஏப்.,18 ல் கொலை செய்யப்பட்டார். நடராஜ பெருமாள் என்பவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.சீவலப்பேரி போலீசார் வழக்குப் பதிந்தனர். கொலை வழக்கில் இளங்காமணி என்பவர்

மதுரை-திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் சுடலைமாட சுவாமி கோவில் உள்ளது. பூஜை, கடைகள் நடத்துவது, வருவாயை பங்கீடு செய்வதில் இருதரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது.

இந்த விரோதத்தில் கோவில் பூஜாரி சிதம்பரம், 45, ஏப்.,18 ல் கொலை செய்யப்பட்டார். நடராஜ பெருமாள் என்பவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.சீவலப்பேரி போலீசார் வழக்குப் பதிந்தனர். கொலை வழக்கில் இளங்காமணி என்பவர் கைதானார். அவர், 'சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை. வழக்கில் தவறாக என்னை சேர்த்துள்ளனர். ஜாமின் அனுமதிக்க வேண்டும்,' என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தார்.

நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். ஜாமின் அனுமதிக்க அரசுத் தரப்பு கடும் ஆட்சேபம் தெரிவித்தது.நீதிபதி, ' பூஜாரி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். உடலில் 26 இடங்களில் காயங்கள் இருந்துள்ளன. மனுதாரர் மீதான குற்றச்சாட்டு தீவிரமானது. விசாரணை முடியவில்லை. ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X