சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் மோதிய விபத்தில் 2 தொழிலாளர்கள் பலி

Added : செப் 06, 2021
Share
Advertisement
விழுப்புரம்-குள்ளஞ்சாவடி அருகே சாலையை கடந்த இரண்டு தொழிலாளர்கள் கார் மோதியதில் பரிதாபமாக இறந்தனர்.விழுப்புரம் மாவட்டம், பக்கிரிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி, 52. கடலுார் மாவட்டம், டி.குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், 50; இருவரும் குள்ளஞ்சாவடி அடுத்த சுப்ரமணியபுரம் பகுதியில் கரும்பு வெட்டும் வேலைக்காக வந்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு 8:15 மணிக்கு,

விழுப்புரம்-குள்ளஞ்சாவடி அருகே சாலையை கடந்த இரண்டு தொழிலாளர்கள் கார் மோதியதில் பரிதாபமாக இறந்தனர்.விழுப்புரம் மாவட்டம், பக்கிரிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி, 52. கடலுார் மாவட்டம், டி.குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், 50; இருவரும் குள்ளஞ்சாவடி அடுத்த சுப்ரமணியபுரம் பகுதியில் கரும்பு வெட்டும் வேலைக்காக வந்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு 8:15 மணிக்கு, தொழிலாளிகள் இருவரும் ஓட்டலில் சாப்பிட்டு கடலுார் - சேலம் நெடுஞ்சாலையை கடந்தனர். அப்போது விருத்தாசலத்தில் இருந்து கடலுார் சென்ற ஹோண்டா அமேஸ் கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தொழிலாளர்கள் மீது மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X