சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணிடம் 'உல்லாசம்' அரசு ஊழியருக்கு வலை

Added : செப் 06, 2021
Share
Advertisement
திருவண்ணாமலை-திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணிடம் உல்லாசமாக இருந்து, தலைமறைவான வேளாண் துறை ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர். ஆசை வார்த்தைசென்னையை சேர்ந்தவர், 35 வயது பெண். பெற்றோரை இழந்த இவர் சென்னையில் உள்ள ஆஸ்ரமத்தில் தங்கி படித்தார். அவருக்கு திருவண்ணாமைல மாவட்டம், செய்யாறை சேர்ந்த சிவக்குமார், 45 என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது.திருமணம் செய்து கொள்வதாக ஆசை

திருவண்ணாமலை-திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணிடம் உல்லாசமாக இருந்து, தலைமறைவான வேளாண் துறை ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆசை வார்த்தைசென்னையை சேர்ந்தவர், 35 வயது பெண். பெற்றோரை இழந்த இவர் சென்னையில் உள்ள ஆஸ்ரமத்தில் தங்கி படித்தார். அவருக்கு திருவண்ணாமைல மாவட்டம், செய்யாறை சேர்ந்த சிவக்குமார், 45 என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது.திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பெண்ணை அழைத்து வந்து திருவண்ணாமலை அடுத்த சோ.கீழ்நாச்சிப்பட்டு பகுதி யில் வீடு எடுத்து தனி குடித்தனம் நடத்தி வந்தார்.தனக்கு அரசு வேலை கிடைத்தவுடன் திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி, கர்ப்பமான அந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன், வேளாண்மை துறையில் உதவி அலுவலராக பணி கிடைத்தது. திருவண்ணாமலையில் மண் பரிசோதனை நிலையத்தில் சிவக்குமார் பணிபுரிந்து வருகிறார். இதையடுத்து பெண்ணிடம் சொல்லாமல் தலைமறைவானார். அதிர்ச்சியடைந்த அந்த பெண், திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். தலைமறைவாக உள்ள சிவக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். 'மட்டையான' ஊழியர்ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக மலைக்கிராமங்களில், கிராமப்புற அஞ்சல் நிலையங்கள் உள்ளன. அருள்வாடி கிராமப்புற அஞ்சலக ஊழியராக ராஜேஷ் என்பவர் பணிபுரிகிறார்.இவர் சில மாதங்களாக, மது போதையில் பணிக்கு வருவதாக புகார் எழுந்தது.போதை தலைக்கேறிய நிலையில், அருள்வாடி அஞ்சலகத்தில் ராஜேஷ் துாங்கும் வீடியோவை கிராம மக்கள் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

'இவர் மலைக்கிராமமக்களுக்கு விரைவு அஞ்சல், பதிவு தபால்கள் மற்றும் நீதிமன்ற வழக்கு கடிதங்கள் உரிய நேரத்தில் வினியோகிக்கப்ப தில்லை. 'வாரத்தில் இரு தினங்கள் மட்டும் அஞ்சல் நிலையம் திறக்கப்படுவதாகவும், இது குறித்து அஞ்சலக உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே போதை ஊழியரை மாற்றி, புதிய ஊழியரை நியமிக்க வேண்டும்' என, அப்பகுதிமக்கள் கூறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X