ஆயில் இன்ஜின் திருட்டு சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆயில் இன்ஜின் திருட்டு சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

Added : செப் 06, 2021
Share
உளுந்துார்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகே ஆயில் இன்ஜினை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.உளுந்துார்பேட்டை, உளுந்தாண்டார்கோவில் பகுதிக்கு நேற்று காலை 6:00 மணியளவில் சரக்கு வேனில் 4 பேர் வந்தனர். அங்கிருந்தவர்களிடம், இரும்பு கடைக்கு வழிகேட்டுள்ளனர். வேனில் ஆயில் இன்ஜின் இருந்ததால், சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் 4 பேரையும் சரக்கு வேனுடன் உளுந்துார்பேட்டை போலீசில்

உளுந்துார்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகே ஆயில் இன்ஜினை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

உளுந்துார்பேட்டை, உளுந்தாண்டார்கோவில் பகுதிக்கு நேற்று காலை 6:00 மணியளவில் சரக்கு வேனில் 4 பேர் வந்தனர். அங்கிருந்தவர்களிடம், இரும்பு கடைக்கு வழிகேட்டுள்ளனர். வேனில் ஆயில் இன்ஜின் இருந்ததால், சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் 4 பேரையும் சரக்கு வேனுடன் உளுந்துார்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில், நால்வரும் உளுந்துார்பேட்டை அடுத்த புதுநன்னாவரம் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி, 67; என்பவரது நிலத்தில் இருந்து ஆயில் இன்ஜினை திருடி வந்தது தெரியவந்தது.குப்புசாமி கொடுத்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து எம்.குன்னத்துாரைச் சேர்ந்த சுப்ரமணி மகன் ராஜ்குமார், 19; மற்றும் 18 வயது சிறுவர்கள் இருவர் 17 வயது சிறுவர் என 4 பேரையும் கைது செய்து, சரக்கு வேனை பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X