சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பணி நிரந்தரம் செய்வதாக கூறி ரூ.4 கோடி மோசடி

Added : செப் 06, 2021
Share
Advertisement
சேலம்-நடமாடும் மருத்துவமனை டிரைவர்களிடம் பணி நிரந்தரம் செய்வதாக கூறி 4 கோடி ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பாதிக்கப்பட்ட 197 பேர் புகார் அளித்தனர்.அவர்கள் சேலம் எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று அளித்த மனு:பொது சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில், நடமாடும் அரசு மருத்துவமனை டிரைவர்களாக, 2008ல் தினக்கூலி அடிப்படையில், 200 பேர் பணிபுரிகிறோம். 2018ல் எங்களுடன்

சேலம்-நடமாடும் மருத்துவமனை டிரைவர்களிடம் பணி நிரந்தரம் செய்வதாக கூறி 4 கோடி ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பாதிக்கப்பட்ட 197 பேர் புகார் அளித்தனர்.

அவர்கள் சேலம் எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று அளித்த மனு:பொது சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில், நடமாடும் அரசு மருத்துவமனை டிரைவர்களாக, 2008ல் தினக்கூலி அடிப்படையில், 200 பேர் பணிபுரிகிறோம். 2018ல் எங்களுடன் பணிபுரியும் வெற்றிவேல், 45 பார்த்தசாரதி, 46, முருகேசன், 45 ஆகியோர், முன்னாள் முதல்வர் பழனிசாமி, அவரது உதவியாளர்கள், கட்சியினர் நன்கு பழக்கம்.'அவர்களை 'கவனித்தால்' 2021 மார்ச்சுக்குள் பணி நிரந்தரம் செய்ததற்கான உத்தரவை பெற்று விடலாம்' என, கூறினர்.

அதை நம்பி 197 பேரும் 4 கோடி ரூபாய் வழங்கினோம். பணத்தை பெற்ற அவர்கள், எங்களுக்கு பணி நிரந்தரம் பெற்று தராமல் ஏமாற்றிவிட்டனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், பணத்தை கேட்டபோது தர மறுப்பதோடு, மொபைல் எண்களையும் மாற்றி விட்டனர்.இந்த மோசடியில் இவர்கள் மூன்று பேர் மட்டுமின்றி பெரும் கும்பலே உள்ளது. அவர்களிடம் இருந்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து விசாரிக்க, மாவட்ட மத்திய குற்றப்பிரிவுக்கு எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X