நடுக்கடலில் கொள்ளையர்கள் அட்டகாசம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நடுக்கடலில் கொள்ளையர்கள் அட்டகாசம்

Added : செப் 06, 2021
Share
நாகப்பட்டினம்-நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி, பொருட்களை கொள்ளைஅடித்து சென்றனர். நாகை கீச்சாங்குப்பத்தை சேர்ந்த, 18 - 55 வயதுள்ள ஏழு மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க நேற்று முன்தினம் காலை இரு படகுகளில் புறப்பட்டனர்.அன்று மாலை 5:00 மணிக்கு, கோடியக்கரைக்கு தென் கிழக்கில் 12 கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக்

நாகப்பட்டினம்-நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி, பொருட்களை கொள்ளைஅடித்து சென்றனர். நாகை கீச்சாங்குப்பத்தை சேர்ந்த, 18 - 55 வயதுள்ள ஏழு மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க நேற்று முன்தினம் காலை இரு படகுகளில் புறப்பட்டனர்.அன்று மாலை 5:00 மணிக்கு, கோடியக்கரைக்கு தென் கிழக்கில் 12 கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் நாகை மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்து கட்டையால் தாக்கினர்.கத்தியை காட்டி மிரட்டி இரண்டு மொபைல்போன்கள், வாக்கிடாக்கி, எக்கோ சவுண்ட் கருவி, மீன் வலைகள் ஆகியவற்றை பறித்து சென்றனர்.காயமடைந்த மீனவர்கள் நேற்று காலை கரைக்கு திரும்பினர். கடற்கொள்ளையர்கள் தாக்குதல் சம்பவம், நாகை மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X