படகில் பயணம்: வாலிபர் பரிதாப பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

படகில் பயணம்: வாலிபர் பரிதாப பலி

Added : செப் 06, 2021
Share
ராமநாதபுரம்--கடலுக்குள் படகில் பயணம் சென்ற இளைஞர்களில் ஒருவர் தவறி விழுந்து பலியானார்.ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியை சேர்ந்தவர் தயாநிதி, 32. இவர் நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் நான்கு பேருடன் அலைகாத்த வலசை கடற்கரையில் இருந்து படகில் கடலுக்குள் சென்றனர். அவர்கள் மது போதையில் இருந்துள்ளனர். அப்போது தயாநிதி கடலுக்குள் தவறி விழுந்து மூழ்கினார்.அவரை நண்பர்கள்

ராமநாதபுரம்--கடலுக்குள் படகில் பயணம் சென்ற இளைஞர்களில் ஒருவர் தவறி விழுந்து பலியானார்.ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியை சேர்ந்தவர் தயாநிதி, 32. இவர் நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் நான்கு பேருடன் அலைகாத்த வலசை கடற்கரையில் இருந்து படகில் கடலுக்குள் சென்றனர். அவர்கள் மது போதையில் இருந்துள்ளனர். அப்போது தயாநிதி கடலுக்குள் தவறி விழுந்து மூழ்கினார்.அவரை நண்பர்கள் மீட்டு உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த போது அவர் இறந்தது தெரிந்தது. மரைன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X