தியாகிகளை வாழும் காலத்திலேயே| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தியாகிகளை வாழும் காலத்திலேயே

Added : செப் 06, 2021
Share
துாத்துக்குடி--''சுதந்திர போராட்ட தியாகிகள் வாழ்ந்த இடங்களை தேடிப்போய் பார்க்க வேண்டும்,'' என, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150 வது பிறந்த தினமான நேற்று தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வ.உ.சி.,யின் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை
 தியாகிகளை வாழும் காலத்திலேயே

துாத்துக்குடி--''சுதந்திர போராட்ட தியாகிகள் வாழ்ந்த இடங்களை தேடிப்போய் பார்க்க வேண்டும்,'' என, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150 வது பிறந்த தினமான நேற்று தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வ.உ.சி.,யின் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். அவர் கூறியதாவது:இளைஞர்கள் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாற்றை படிக்க வேண்டும்.

அவரது ரசிகர்களாக மாற வேண்டும். அவர்கள் போராடவில்லையென்றால் நாம் சுதந்திர மாக நடமாட முடியாது.நாட்டிற்காகவும், மொழிக்காகவும் போராடிய தலைவர்களை அவர்களது வாழ்நாளிலேயே போற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.துாத்துக்குடியில் வ.உ.சி., கல்விக்கழகம், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் நடந்த விழாவில் 6 பேருக்கு வ.உ.சி., விருதுகளை வழங்கிப் பேசினார். அங்கு தமிழிசை பேசுகையில், ''வ.உ.சி., துாத்துக்குடியில் இருந்து சுதேசி கப்பல் விட்டார். அவருக்கு எதிராக ஆங்கிலேயர்கள் தந்த இலவசம் அவரை வீழ்த்தியது. அந்த காலத்திலேயே இலவசங்கள் நல்லவர்களை வீழ்த்தியிருக்கிறது என்பதை துாத்துக்குடி மண் உணர்த்துகிறது,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X