பொது செய்தி

தமிழ்நாடு

செங்கல்பட்டுக்கு 21 துறை அலுவலகங்கள் இன்னமும் பிரிக்கல! மாவட்டம் பிரித்து 2 ஆண்டுகள் ஆகியும் மெத்தனம்

Added : செப் 06, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் பிரிக்கப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் உருவாகி, இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், 21 துறை அலுவலகங்கள், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வராமல் உள்ளன. பெரும்பாலான துறை அலுவலகங்கள் இன்னமும் காஞ்சிபுரத்திலேயே செயல்படுவதால், பொதுமக்கள் மனு அளிக்கவோ, அதிகாரிகளை சந்திக்க சிரமப்படுகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டம், இரண்டு ஆண்டுகளுக்கு முன், 4,300 சதுர

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் பிரிக்கப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் உருவாகி, இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், 21 துறை அலுவலகங்கள், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வராமல் உள்ளன.

பெரும்பாலான துறை அலுவலகங்கள் இன்னமும் காஞ்சிபுரத்திலேயே செயல்படுவதால், பொதுமக்கள் மனு அளிக்கவோ, அதிகாரிகளை சந்திக்க சிரமப்படுகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டம், இரண்டு ஆண்டுகளுக்கு முன், 4,300 சதுர கி.மீ.,பரப்பளவில் பெரிய மாவட்டங்களில் ஒன்றாக இருந்தது. இதனால், நிர்வாக ரீதியாகவும் சிரமமாகவும், பொதுமக்கள் அதிகாரிகளை எளிதில் அணுக முடியாத சூழலும் நிலவியது.வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டத்தில், மனு அளிக்க விரும்பும் நபர், சூணாம்பேடு, பல்லாவரம், திருப்போரூர், அச்சிறுப்பாக்கம் போன்ற பகுதிகளில் இருந்து, இரண்டு பஸ் ஏறி வந்து, காஞ்சிபுரத்தில் மனு அளிக்க வேண்டியிருந்தது.

அதேபோல், தேர்தல் நடத்தும் போதும், சட்டம் - ஒழுங்கு விவகாரங்களிலும், மாவட்ட நிர்வாகத்தை நடத்த அதிகாரிகளுக்கு சிரமம் இருந்தது.இதனால், 2019ம் ஆண்டு, நவம்பர் மாதம், முன்னாள் முதல்வர் பழனிசாமி, காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, செங்கல்பட்டு மாவட்டத்தை அறிவித்தார்.எல்லைகள் பிரிக்கப்பட்டு, வண்டலுார், குன்றத்துார் ஆகிய தாலுகாக்கள் உருவாகின.

செங்கல்பட்டு மாவட்டம், 359 ஊராட்சிகளும், எட்டு நகராட்சிகளும், 12 பேரூராட்சிகள், எட்டு தாலுகா, எட்டு ஒன்றியங்களுடன் பிரிக்கப்பட்டன.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 274 ஊராட்சிகள், ஐந்து பேரூராட்சி, ஒரு நகராட்சி, ஐந்து தாலுகா, ஐந்து ஒன்றியம் என, பிரிக்கப்பட்டன.மாவட்டம் பிரிக்கப்பட்டபோது, முக்கிய துறைகளான, வருவாய், ஊரக வளர்ச்சி, போலீஸ் போன்ற முக்கிய துறைகள் பிரிக்கப்பட்டன.செங்கல்பட்டு மாவட்டத்திற்கு, கலெக்டர், எஸ்.பி., மாவட்ட வருவாய் அலுவலர், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

ஆனால், காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து, இன்னமும் பல துறைகள் பிரிக்கப்படாமல் உள்ளது, பொதுமக்கள் தொடர்ந்து அலைச்சலுக்கு ஆளாவதாக புகார் எழுகிறது.புகார்குழந்தை வளர்ச்சி பணிகள், வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகிய துறை அலுவலகங்கள் மட்டும், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு, சட்டசபையில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.மற்ற துறை அலுவலகங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்தபடியே, செங்கல்பட்டு மாவட்டத்திற்கும் இணைந்து செயல்பட்டு வருகிறது.மாவட்டம் பிரிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், பல அலுவலகங்கள் இரண்டு மாவட்டங்களுக்கும் சேர்த்தே செயல்படுவது, பொதுமக்களை மேலும் அவதிக்குள்ளாக்குவதாக புகார் எழுந்துள்ளது.அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இல்லாத அரசு அலுவலகங்கள், கல்லுாரிகள் செங்கல்பட்டில் உள்ளன.

மாவட்ட நுாலக அலுவலகம், மாவட்ட முதன்மை நீதிமன்றம், சட்டக் கல்லுாரி, மருத்துவக் கல்லுாரி போன்றவை செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளன. இந்த கல்லுாரிகளும், அரசு அலுவலகங்களும் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வர வேண்டியுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட வேண்டிய துறைகள்:கால்நடை பராமரிப்பு துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி அலுவலகம், குழந்தை பாதுகாப்பு அலகு, கூட்டுறவு துறை, மண்டல மேலாளர், மண்டல நுகர்ப்பொருள் வாணிபக் கழகம், பொதுப்பணித்துறை, சமூக நலத்துறை, வேலைவாய்ப்பு அலுவலகம்.மருத்துவ காப்பீடு திட்டம், கேபிள் டிவி கார்ப்பரேஷன், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலகம், குடிசை மாற்று வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தொழிலாளர் நலத்துறை, கனிம வளத்துறை, புள்ளியல் துறை, மாவட்ட கருவூலம், குழந்தை தொழிலாளர் தடுப்பு துறை, மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர், மாவட்ட ஊராட்சி அலுவலகம், கலெக்டரின் நேர்முக உதவியாளர்- சத்துணவு. காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு என, வர வேண்டிய திட்டங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள்:புறநகர் பஸ் நிலையம், மருத்துவ கல்லுாரி, சட்டக்கல்லுாரி மாவட்ட முதன்மை நீதிமன்றம் நீதிபதி மாவட்ட நுாலக அலுவலர், மாவட்ட குழந்தைகள் நல குழுமம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை.ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி அலுவலகம், குழந்தை பாதுகாப்பு அலகு போன்ற குழந்தை சம்பந்தமான அலுவலகங்கள் செங்கல்பட்டில் துவங்கப்படும் என, சட்டசபையில் தமிழக அரசு அறிவித்துள்ளது. விரைவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்த அலுவலகங்கள் துவக்கப்பட உள்ளது.கசற்குணா,திட்ட அலுவலர்,ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் காஞ்சிபுரம்-மாவட்ட சமூக நலத்துறை செங்கல்பட்டு மாவட்டத்திற்கு துவங்க இன்னும் அரசாணை வரவில்லை. அரசாணை வந்தவுடன் துவங்கப்படும்.

எஸ். சங்கீதா,மாவட்ட சமூக நல அலுவலர், காஞ்சிபுரம் பொதுப்பணித் துறையை பொறுத்தவரை, செங்கல்பட்டு மாவட்டத்தில் தனி அலுவலகம் துவங்க வாய்ப்பில்லை. பணிச்சுமையை பெரிய அளவில் இல்லை. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் சேர்த்தே தான் செயல்படும். தமிழகத்தில் இரண்டு மாவட்டத்திற்கு ஒரு பொதுப்பணித்துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்திற்கு என தனி அலுவலகம் வர வாய்ப்பில்லை.அதிகாரி ஒருவர்,பொதுப்பணித் துறை,காஞ்சிபுரம்.செங்கல்பட்டு மாவட்டத்திற்கு புதிய வேலைவாய்ப்பு அலுவலகமும், அதிகாரிகள் நியமனமும் ஏற்படுத்த, சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.விரைவில் அதற்கான பணிகள் துவங்கப்படும்.ஆர்.அருணகிரி,துணை இயக்குனர்,வேலைவாய்ப்பு அலுவலகம்,காஞ்சிபுரம்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X