இரும்பு திருடிய இருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரும்பு திருடிய இருவர் கைது

Added : செப் 06, 2021
Share
திண்டிவனம் : திண்டிவனத்தில் இரும்பு பொருட்களைத் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம், சஞ்சீவிராயன்பேட்டை கம்பர் தெருவைச் சேர்ந்தவர் மீரான்கான், 52; இரும்பு கடை வைத்துள்ளார். கடந்த 3ம் தேதி இவர், தனது வீட்டின் எதிரே வைத்திருந்த 455 கிலோ இரும்பு பொருட்கள் திருடு போனது. இதன் மதிப்பு 15 ஆயிரம் ரூபாய் ஆகும்.புகாரின் பேரில், திண்டிவனம் டவுன் போலீசார் வழக்குப்

திண்டிவனம் : திண்டிவனத்தில் இரும்பு பொருட்களைத் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம், சஞ்சீவிராயன்பேட்டை கம்பர் தெருவைச் சேர்ந்தவர் மீரான்கான், 52; இரும்பு கடை வைத்துள்ளார். கடந்த 3ம் தேதி இவர், தனது வீட்டின் எதிரே வைத்திருந்த 455 கிலோ இரும்பு பொருட்கள் திருடு போனது.

இதன் மதிப்பு 15 ஆயிரம் ரூபாய் ஆகும்.புகாரின் பேரில், திண்டிவனம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து, திண்டிவனம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் செல்வகுமார், 21; சஞ்சீவிராயன்பேட்டையைச் சேர்ந்த ரமேஷ் மகன் சந்துரு, 22; ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X