இரவில் கடலுக்குள் சுற்றுலா ஒருவர் மூழ்கி பலி| Dinamalar

இரவில் கடலுக்குள் சுற்றுலா ஒருவர் மூழ்கி பலி

Added : செப் 06, 2021 | கருத்துகள் (2)
Share
ராமநாதபுரம்,--இரவு நேரத்தில் கடலுக்குள் படகில் உல்லாச பயணம் சென்ற இளைஞர்களில் ஒருவர் தவறி விழுந்து மூழ்கி பலியானார்.ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி புதுநகரம் பகுதியை சேர்ந்த வேலுச்சாமி மகன் தயாநிதி 32. இவர் நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் நான்கு பேருடன் மது போதையில் அலைகாத்த வலசை கடற்கரையில் இருந்து தோணியில் கடலுக்குள் சென்றனர். அப்போது சிறுநீர் கழிக்க முயன்ற

ராமநாதபுரம்,--இரவு நேரத்தில் கடலுக்குள் படகில் உல்லாச பயணம் சென்ற இளைஞர்களில் ஒருவர் தவறி விழுந்து மூழ்கி பலியானார்.ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி புதுநகரம் பகுதியை சேர்ந்த வேலுச்சாமி மகன் தயாநிதி 32. இவர் நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் நான்கு பேருடன் மது போதையில் அலைகாத்த வலசை கடற்கரையில் இருந்து தோணியில் கடலுக்குள் சென்றனர். அப்போது சிறுநீர் கழிக்க முயன்ற தயாநிதி கடலுக்குள் தவறி விழுந்து மூழ்கினார்.அவரை நண்பர்கள் மீட்டு உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த போது அவர் இறந்துவிட்டது தெரிய வந்தது. புதுமடம் மெரைன் போலீசார் விசாரிக்கின்றனர்.--

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X