பொது செய்தி

தமிழ்நாடு

செங்கையில் 10 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கல்

Added : செப் 06, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு : செங்கல்பட்டில், பத்து ஆசிரியர்களுக்கு, நல்லாசிரியர் விருதுகளை, ஊரக தொழில்துறை அமைச்சர்அன்பரசன், நேற்று, வழங்கினார்.செங்கல்பட்டு மாவட்டத்தில், திருப்போரூர் கரும்பாக்கம் அரசு உயர் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கமலக்கண்ணன், வீராணக்குண்ணம் அரசு மேல் நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் (கணிதம்) சரவணன், மதுராந்தகம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்
 செங்கையில் 10 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கல்

செங்கல்பட்டு : செங்கல்பட்டில், பத்து ஆசிரியர்களுக்கு, நல்லாசிரியர் விருதுகளை, ஊரக தொழில்துறை அமைச்சர்அன்பரசன், நேற்று, வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், திருப்போரூர் கரும்பாக்கம் அரசு உயர் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கமலக்கண்ணன், வீராணக்குண்ணம் அரசு மேல் நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் (கணிதம்) சரவணன், மதுராந்தகம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் விஜயகுமாரி, தொழிற்கல்வி ஆசிரியர் சிவக்குமார்;சென்னை, திருவஞ்சேரி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் பனிமயம் பெர்னாண்டோ, காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியம் கருநிலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் ரமேஷ், செம்மஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி ஆசிரியர் (கணிதம்) ராஜி;திருப்போரூர் குன்னப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பிரபுதாஸ், சென்னை சேலையூர் சீயோன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி முதல்வர் சாந்தி, சென்னை சிட்லபாக்கம் அரசு உயர் நிலைப்பள்ளி (சமூக அறிவியல்) ஆசிரியர் டாக்டர் சொக்கலிங்கம் ஆகியோருக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி, தமிழக அரசு உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து, ஆசிரியர் தின விழாவையொட்டி, நல்லாசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா, கலெக்டர் ராகுல்தாத், தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில், நேற்று, நடந்தது.ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று, நல்லாசியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு, பதக்கம், ரொக்கபரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். எம்.பி., செல்வம், எம்.எல்.ஏ., வரலட்சுமி மதுசூதனன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முதன்மை கல்வி அலுவலர் ரோஸ்நிர்மலா, வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் நாராயணன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X