பொது செய்தி

இந்தியா

தமிழகம் எப்போதுமே ஆன்மிக பூமிதான்: பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

Added : செப் 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சிவகாசி-தமிழகம் எப்போதுமே ஆன்மிக பூமிதான், இங்குள்ள 4 லட்சம் கோயில்களில் 35 ஆயிரம் கோயில்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.சிவகாசியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கி உள்ளார். மகாராஷ்டிராவிலும் நடக்க உள்ளது. தமிழகத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. செப். 10, 11 , 12 தேதிகளில் பா.ஜ.,
 தமிழகம் எப்போதுமே ஆன்மிக பூமிதான்: பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

சிவகாசி-தமிழகம் எப்போதுமே ஆன்மிக பூமிதான், இங்குள்ள 4 லட்சம் கோயில்களில் 35 ஆயிரம் கோயில்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.

சிவகாசியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கி உள்ளார். மகாராஷ்டிராவிலும் நடக்க உள்ளது. தமிழகத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. செப். 10, 11 , 12 தேதிகளில் பா.ஜ., தலைவர்கள், நிர்வாகிகள் என ஒரு லட்சம் பேர் வீட்டு வாசலில் வைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாட உள்ளோம்.கோடநாடு வழக்கில் முன்னாள் முதல்வர் பழனிசாமியை சிக்க வைக்க தமிழக அரசு தாக்குதலை தொடுத்துள்ளது. அடுத்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி குழப்பம் இல்லாமல் உள்ளது.சிவகாசியின் பட்டாசு தொழிலை பா.ஜ., அரசு நிச்சயமாக பாதுகாக்கும்.

சீன பட்டாசுகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது, என்றார்.முன்னதாக செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசியது: தற்போது 4 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அடுத்த தேர்தலில் 150 எம்.எல்.ஏ., க்கள் வெற்றி பெறுவோம்.கடவுள் இல்லை என கூறும் ஸ்டாலின், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோபுரத்தின் சின்னத்தைதான் கையெழுத்தின் கீழ் வைக்கிறார். எனவே அவர் கடவுள் இருக்கிறார் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.கோயிலில் மொட்டை போட்டால் பணம் கொடுக்க வேண்டாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏனெனில் அவர்கள் தமிழக மக்களுக்கு மொட்டை போட உள்ளனர்.சமையல் காஸ், பெட்ரோல் விலை விரைவில் குறையும்.மோடிக்கு எந்த சொத்தும் இல்லை. வங்கி கணக்கில் ரூ. 2 லட்சத்திற்கு மேல் இல்லை. ஆனால் திருவாரூரில் பிறந்தவர்களுக்கு ஏராளமான சொத்துகள் வந்தது எப்படி.சிவகாசியில் தொழில்களை பாதுகாக்க விருதுநகர் தொகுதியில் பா.ஜ., எம்.பி., தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தமிழகத்தில் வரும் காலம் பா.ஜ., வின் காலமாக மாறும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
06-செப்-202120:35:20 IST Report Abuse
RajanRajan தமிழகம் எனும் ஒரு ஆன்மீக பூமி கலாச்சாரமே இல்லாத இந்து துவேஷிகளின் ஆட்சி அதிகாரம் எனும் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருக்கிறது. அந்த விஸ்வரூப சக்தி தான் இங்கு பெருக்கெடுத்து துஷ்டர்களை அழிக்க வேண்டும். தர்மம் மிக்க கலாச்சாரம் மறுபடியும் மலர வேண்டும். இது நிச்சயமாக நடக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X