உ.பி., யில் குவிந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள்

Updated : செப் 06, 2021 | Added : செப் 06, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
லக்னோ: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகரில் நேற்று நடந்த மகா பஞ்சாயத்து கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கில் திரண்டனர்.மத்திய அரசு அமல்படுத்திய மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த விவசாய சங்கத்தினர் கடந்த ஆண்டு நவ.,

லக்னோ: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகரில் நேற்று நடந்த மகா பஞ்சாயத்து கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கில் திரண்டனர்.



latest tamil news



மத்திய அரசு அமல்படுத்திய மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த விவசாய சங்கத்தினர் கடந்த ஆண்டு நவ., முதல் டில்லி எல்லையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பல்வேறு சுற்று பேச்சுக்களில் சமரசம் ஏற்படாததை அடுத்து போராட்டம் தொடர்கிறது. இந்நிலையில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தர பிரதேசத்தின் முசாபர்நகரில் மகா பஞ்சாயத்து கூட்டத்தை நேற்று நடத்த, சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பு ஏற்பாடு செய்தது.

இதில் பங்கேற்க அனைத்து மாநில விவசாய சங்கத்தினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. மகா பஞ்சாயத்தில் பங்கேற்க வந்த விவசாயிகளை கவுரவிக்கும் விதமாக ஹெலிகாப்டர் வாயிலாக அவர்கள் மீது மலர் துாவ, ராஷ்ட்ரீய லோக் தள கட்சியினர் ஏற்பாடு செய்தனர். ஆனால் பாதுகாப்பு காரணங்களால் அதற்கு அனுமதி அளிக்க மாவட்ட நிர்வாகம் மறுத்து விட்டது.முசாபர்நகரில் உள்ள பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் சஞ்சீவ் குமார் பல்யான் மற்றும் பா.ஜ., - எம்.எல்.ஏ., உமேஷ் மாலிக் ஆகியோர் வீடுகளில் முன்னெச்சரிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

அடுத்தாண்டு நடக்க உள்ள உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜ., வுக்கு எதிராக பிரசாரம் செய்யஉள்ளதாக இந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை செப்., 8க்குள் 'வாபஸ்' பெறும்படி பஞ்சாபைச் சேர்ந்த 32 விவசாய சங்கங்கள், பஞ்சாப் மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன.இந்த கூட்டத்தில் பங்கேற்ற பாரதிய கிசான் யூனியன் அமைப்பைச் சேர்ந்த ராகேஷ் திகாயத், பிரதமர் நரேந்திர மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார்.


latest tamil news


பா.ஜ., - எம்.பி.., யான வருண், 'புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு, விவசாயிகளுடன் பேச்சு நடத்த வேண்டும்' என, சமூக வலைதளத்தில் தெரிவித்து உள்ளார்.மீண்டும் பேசுங்கள்வருண் வலியுறுத்தல்!உ.பி.,யில் நேற்று திரண்ட விவசாயிகள் கூட்டத்தின் 'வீடியோ'வை, பா.ஜ., - எம்.பி., வருண், தன் சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:விவசாயிகளுடன் அரசு தரப்பு மீண்டும் பேச்சை துவங்க வேண்டும். இந்த விவகாரத்தில் அவர்கள் தரப்பு கருத்தையும், அவர்களது வலியையும் நாம் முழுதுமாக உணர்ந்து பிரச்னைக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - Madurai,இந்தியா
06-செப்-202122:14:00 IST Report Abuse
தமிழன் எலிகாப்டரில் மலர் தூவும் விவசாயிஸ். பிரமாதம்.
Rate this:
Cancel
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
06-செப்-202112:44:13 IST Report Abuse
SENTHIL NATHAN விவசாயிகளுக்கு ஆதரவாக நிஜமாகவே எண்ணம் கொண்டவர்கள் நேரடியாக சென்று விவசாயிகளிடம் பொருட்களை வாங்கி கொள்ளுங்கள் பார்க்கலாம் இங்கு கருது போட்டு என்ன பிரயோஜனம் ???
Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
06-செப்-202114:15:22 IST Report Abuse
pradeesh parthasarathyசென்னையிலிருந்து வயக்காட்டில சென்று வாங்குவியா ..?...
Rate this:
Cancel
Vaiyapuri Rajendran - Chennai,இந்தியா
06-செப்-202110:18:14 IST Report Abuse
Vaiyapuri Rajendran நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள் ..அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்...அதை விடுத்து அந்த போராட்டத்தை கொச்சை படுத்தும் செயல் நல்லதல்ல.. இந்தியாவின் முக்கிய தொழில் விவசாயம்...130 கோடி மக்கள் உள்ள இந்தியாவுக்கு உணவு அளிக்கும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இந்த சட்டங்களை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம், குடியரசு தலைவர், பிரதமர் கவனத்தை ஈர்க்கும் வகையில் அனைத்து பத்திரிக்கை ஊடகங்களும் ஒரு நாள் ஒதுக்கி அனைத்து பத்திரிக்கைகளின் தலைப்பு செய்தியும், தலையங்கமும் வெளியிட்டு ஆதரிக்க வேண்டும்.....சுதந்திர போராட்ட காலத்தில் பத்திரிக்கைகள் செயல்பட்டது போல இதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X