சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

மீதியையும் சொல்லுங்க பன்னீர்!

Updated : செப் 12, 2021 | Added : செப் 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
டி.ஈஸ்வரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின், அ.தி.மு.க., இரண்டாக உடைந்தபோது, பன்னீர்செல்வம் 'விரைவில் 90 சதவீத உண்மையை சொல்கிறேன்' என்றார். நான்கரை ஆண்டு கழித்து அந்த உண்மை இப்போது தெரிந்து விட்டது!மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்று, சட்டசபையில் அ.தி.மு.க.,
 இது உங்கள் இடம்

டி.ஈஸ்வரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின், அ.தி.மு.க., இரண்டாக உடைந்தபோது, பன்னீர்செல்வம் 'விரைவில் 90 சதவீத உண்மையை சொல்கிறேன்' என்றார். நான்கரை ஆண்டு கழித்து அந்த உண்மை இப்போது தெரிந்து விட்டது!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்று, சட்டசபையில் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பேசினார்.'என் தந்தை ஓட்டக்கார தேவர் தீவிர கருணாநிதி பக்தர். வரலாற்றில் கருணாநிதியின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும்...' என, தி.மு.க., வினரையே நெகிழ வைக்கும் அளவுக்கு நெகிழ்ச்சியாக பேசினார்.எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதாவிற்கு நிரந்தர அரசியல் எதிரியாக இருந்தவர் கருணாநிதி என்பதை, பன்னீர் செல்வம் மறந்து விட்டாரா?

தன் குடும்பமே கருணாநிதியின் தீவிர பக்தர்கள் என்ற 90 சதவீத உண்மையை, பன்னீர்செல்வம் சொல்லிவிட்டார்.பராசக்தி படத்தில் சிவாஜி கணேசனின் தங்கைக்கு பிறக்கும் குழந்தையின் பெயர், பன்னீர்செல்வம். அதை தான், ஓட்டக்கார தேவர் தன் மகனுக்கு சூட்டியுள்ளார்.

பன்னீர்செல்வத்தின் பெயர் காரணம் ஜெயலலிதாவிற்கு தெரியாமல் இருந்திருக்கலாம்... ஆனால் கருணாநிதிக்கு தெரிந்திருக்கிறது. அதனால் தான், 'அ.தி.மு.க.,வில் எனக்கு பிடித்த ஒருவர் பன்னீர்செல்வம்' என சட்டசபையிலேயே கூறினார்.'பன்னீர்செல்வம் முதல்வராக நீடிக்க, தி.மு.க., துணை நிற்கும்' என, அக்கட்சியின் பொது செயலர் துரைமுருகன் சொன்னார்.
தி.மு.க., மீதுள்ள பற்றின் வெளிப்பாடு தான் சட்டசபையில் பன்னீர்செல்வத்தின் நெகிழ்ச்சியான பேச்சு. பன்னீர்செல்வம் சொல்லபோகும் மீதி, 10 சதவீத உண்மை என்னவாக இருக்கும்... அதை எப்போது சொல்ல போகிறார்?


வரலாறு தெரியுமா மெஹபூபா?கே.நாகலட்சுமி, விழுப்புரத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள ஜம்மு -- காஷ்மீர், நாடு சுதந்திரம் அடைந்த போது ஹிந்து நாடான இந்தியாவுடன் இணைந்தது. 'அப்போது பா.ஜ., ஆட்சியில் இருந்திருந்தால் கண்டிப்பாக சேர்ந்திருக்க மாட்டோம்' என, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முப்தி கூறியுள்ளார்.

அவருக்கு இந்திய சுதந்திர போராட்ட வரலாறு தெரியவில்லை. ஜம்மு - காஷ்மீர் எத்தகைய சூழலில் இந்தியாவுடன் இணைந்தது என்பதை மறந்து விட்டார்.இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது, ஜம்மு - காஷ்மீர் மன்னர் ஹரி சிங், தனி சமஸ்தானமாக தொடரவே விரும்பினார்.ஆனால் பாகிஸ்தான் படை, காஷ்மீருக்குள் நுழைந்தது. இதனால் மன்னர் ஹரி சிங், இந்தியாவிடம் ராணுவ உதவி கோரினார்.

இதையடுத்து, காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க, அவர் சம்மதித்தார்.அதன் பின், பாகிஸ்தான் படையை நம் ராணுவம் துரத்தி அடித்து, காஷ்மீரை காப்பாற்றியது. ஆனால், காஷ்மீரின் சில பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமித்து விட்டது.அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, 'பாகிஸ்தான் ஆக்கிரமித்த பகுதியில் புல் கூட வளராது. போகட்டும்...' என்று பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்தார்.

அந்த, 'தியாகத்தின்' பலனை நாம் இன்றும் அனுபவிக்கிறோம். அந்த பகுதி, 'பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்' என்று அழைக்கப்படுகிறது. அங்கு தான் பயங்கரவாதிகளின் கூடாரம் உள்ளது. அங்கிருந்து தான் நம் நாட்டில் சதிச் செயல் புரிய பயங்கரவாதிகள் ஊடுருவுகின்றனர்.

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்தது, காங்கிரஸ் அரசு தான். அதனால், அங்கு வசித்த காஷ்மீர் பண்டிட்கள் ஏராளமானோர் புலம் பெயர்ந்தனர்.காஷ்மீர் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி, பயங்கரவாத செயலை ஊக்குவிக்கும் மெஹபூபா முப்தியை சட்டப்படி தண்டிக்க வேண்டும்.


செப்படி வித்தையை சொல்லுங்கள்!


முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, 'அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்களுக்கு தமிழில் பெயர் சூட்ட ஊக்குவிக்கப்படும்' என அறிவித்துள்ளார். தமிழ் இனி வேகமாக வளரும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.ஐயா... பெயர் வைப்பதற்கு முன்னால் அந்த கட்டடங்கள் கட்ட பயன்படுத்தியது சிமென்டா அல்லது சாம்பலா என்பதை தயவு செய்து ஊர்ஜிதப்படுத்தி கொள்ளுங்கள்.

கட்டடங்களுக்கு அழகான பெயர் சூட்டுவதை விட பலமான அஸ்திவாரமும், கலப்படமில்லாத கலவையும் தான் மிகவும் அவசியம்.மறைந்த, காமெடி நடிகர் நாகேஷ் ஒரு படத்தில், 'நாய்க்கு பேரு வச்சாளே, சோறு வச்சாளா' என சொல்வார்; கட்டடங்கள் அந்த கதையாகி விடும்!தமிழ் வளர்ச்சியடைய வேண்டும்; அதற்கு உண்டான திட்டங்களை அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதில், யாருக்கும் இரண்டாவது கருத்து கிடையாது.

ஆனால் பெயர் மட்டும் போதுமா?தமிழ் பெயர்களை சூட்டினாலே தமிழ் வளர்ந்து விடும் என்ற ஆலோசனையை யார் சொன்னது என தெரியவில்லை.சங்க காலம் முதல் இன்று வரை பன்முகத்தோடு தமிழ் வளர்ந்து வருகிறது.அணிகலன்கள் பெயரால் ஐம்பெரும் காப்பியம் தந்தது தமிழ். உலக பொதுமறையான திருக்குறளை தந்தது தமிழ். ஆன்மிகம் வளர பக்தி இலக்கியம் கண்டது தமிழ்.

அவ்வையாரும், கம்பனும், பாரதியும், பாரதிதாசனும் பாடி மகிழ்ந்தது தமிழ். கண்ணதாசன் முதல் சிற்பி, வைரமுத்து என சமகால கவிஞர் போற்றியதும் தமிழ்.இப்படி, இவர்கள் எல்லாம் வளர்க்காத தமிழையா, கட்டடத்திற்கு பெயர் சூட்டும் செயல் வளர்க்க போகிறது? நல்ல வேடிக்கை. ஆக்கப்பூர்வமாக ஏதாவது திட்டமிட்டு செயல்படுங்கள்.
'கம்பன் கடலை கடை, பாரதி பால் நிலையம், இளங்கோ இனிப்பு பலகார கடை' என பெயர் சூட்டுவதால் மொழி எப்படி வளரும் என்ற செப்படி வித்தையை, அமைச்சர் பெருமகனார் விளக்க வேண்டும்.'அன்னை தமிழில் அர்ச்சனை' என்றனர்; இப்போது, 'கட்டடங்களுக்கு தமிழில் பெயர் சூட்டுவோம்' என்கின்றனர். ஒன்று புரிகிறது... தமிழ் வளர்கிறதோ இல்லையோ, மொழியை முன்னிறுத்தி செய்யும் அரசியலால், அவர்கள் வளர்கின்றனர்!

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
06-செப்-202115:59:10 IST Report Abuse
D.Ambujavalli இருக்கும் நிலையில் தன வீட்டுக்கதவையும் அமலாக்கமும், வருமான வரியும் எப்போது தட்டுமோ என்ற நிலையில், கலைஞர் துதி பாட தானே நாக்கு சுழலும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X