சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : செப் 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: காலத்தின் கட்டாயத்தால், பா.ஜ., ஆட்சிக்கு வந்தே தீரும். அடைகாத்த கோழி மாதிரி, பொத்தி பொத்தி வளர்க்கப்படும் உதயநிதியால் தலைவராக முடியாது. வரும், 2024ல் இந்தியா ஒரே கட்சியை, அதாவது, பா.ஜ.,வை நோக்கி சென்று கொண்டிருக்கும். 2024ல், 400 எம்.பி.,க்களை, பா.ஜ., பெறப் போவதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது.'டவுட்' தனபாலு: 400 மட்டுமல்ல, 543 தொகுதிகளில், பா.ஜ., வெற்றி
 'டவுட்' தனபாலு

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: காலத்தின் கட்டாயத்தால், பா.ஜ., ஆட்சிக்கு வந்தே தீரும். அடைகாத்த கோழி மாதிரி, பொத்தி பொத்தி வளர்க்கப்படும் உதயநிதியால் தலைவராக முடியாது. வரும், 2024ல் இந்தியா ஒரே கட்சியை, அதாவது, பா.ஜ.,வை நோக்கி சென்று கொண்டிருக்கும். 2024ல், 400 எம்.பி.,க்களை, பா.ஜ., பெறப் போவதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது.

'டவுட்' தனபாலு: 400 மட்டுமல்ல, 543 தொகுதிகளில், பா.ஜ., வெற்றி பெற்றாலும், பா.ஜ.,வின் கொள்கை, செயல்படுத்தும் திட்டங்கள் தவறு என்ற ரீதியில் எதிர்க்கட்சிகள் செய்யும் பிரசாரம் தான் மக்கள் மத்தியில் எடுபடும். அந்த அளவுக்குத் தான் நாட்டின் நிலைமை உள்ளது. எனவே, இதுபோன்ற வெற்றி, எதிர்க்கட்சிகளின் மனநிலையில் மாற்றம் செய்யப் போவதில்லை என்பதில், 'டவுட்'டே இல்லை!

பா.ஜ., சிறுபான்மையினர் அணி தேசிய செயலர் இப்ராஹிம்: பொதுத் துறை நிறுவனங்களை மத்திய அரசு விற்பதாக தவறான பிரசாரத்தை, தி.மு.க.,வினர் செய்கின்றனர். பொதுத் துறை நிறுவனங்களை மத்திய அரசு குத்தகைக்கு தான் விடுவதாக மத்தியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்திஇருக்கிறார்.

'டவுட்' தனபாலு: இதுபோன்ற தகவல்களை, தி.மு.க.,வினர் மட்டும் பார்த்திருக்க மாட்டார்களோ; பார்த்தாலும் அது பற்றி கவலைப்பட மாட்டார்களோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது. ஏனெனில், முதலில் வரும் தகவல்களை வைத்து பேசும் இந்த கட்சியின் தலைவர்கள், அந்த துறை சார்ந்த அமைச்சர் கூறும் பதில்களை பெரும்பாலும் கேட்பதில்லை. கேட்டாலும், அதை பரிசீலிப்பதுமில்லை!

அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை: டாக்டர்களின் நியாயமான ஊதிய கோரிக்கையை, எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது ஆதரித்துவிட்டு, அதை நிறைவேற்றும் இடத்தில் இருக்கும் போது நிறைவேற்றாதது வேதனை அளிக்கிறது. எங்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் தான் தேவை.

'டவுட்' தனபாலு: சம்பள உயர்வு என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தினால், எந்த அரசும் கேட்காது. அதுவும், இந்த கொரோனா பாதிப்பு காலத்தில், கொஞ்சம் நெளிவு, சுளிவு அரசு டாக்டர்களுக்கும் வேண்டும். அது இல்லாமல், வெறுமனே சம்பள உயர்வு அறிக்கை விடுவது எந்த விதத்திலும் பலனளிக்காது என்பதில், 'டவுட்'டே இல்லை!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
06-செப்-202115:46:13 IST Report Abuse
D.Ambujavalli ஒன்றரை வருஷம் பள்ளிக்கே செல்லாமல் ஊதியம் பெற்ற ஆசிரியர்கள் போராடுவதை அநியாயம் எனலாம் ஆனால் கால நேரமில்லாமல் நோயுடன் போராடி, பலர் நோய்க்கே பலியாகுமளவு சவாலை சந்திக்கும் மருத்துவர்களின் ஊதிய உயர்வு நியாயமான கோரிக்கைதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X