பொது செய்தி

தமிழ்நாடு

புதிய கண்டுபிடிப்பு; ரூ.5 லட்சம் மானியம்

Added : செப் 06, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் நிப்ட்-டீ கல்லுாரி தொழில்முனைவோர் திறன் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், புதிய தொழில்முனைவோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம், ஆன்லைனில் நேற்று நடந்தது.சென்னை தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன (இ.டி.ஐ.ஐ.,) இணை இயக்குனர் பாஸ்கரன் பேசியதாவது:புதிதாக தொழில் துவங்குவோருக்கு, தேவையான அனைத்து உதவிகளையும் இ.டி.ஐ.ஐ.,
 புதிய கண்டுபிடிப்பு; ரூ.5 லட்சம் மானியம்

திருப்பூர்:திருப்பூர் நிப்ட்-டீ கல்லுாரி தொழில்முனைவோர் திறன் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், புதிய தொழில்முனைவோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம், ஆன்லைனில் நேற்று நடந்தது.சென்னை தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன (இ.டி.ஐ.ஐ.,) இணை இயக்குனர் பாஸ்கரன் பேசியதாவது:புதிதாக தொழில் துவங்குவோருக்கு, தேவையான அனைத்து உதவிகளையும் இ.டி.ஐ.ஐ., செய்கிறது. தொடர் விழிப்புணர்வு முகாம்கள் மூலம், புதிதாக தொழில் துவங்க வேண்டும் என்ற ஆர்வம் துாண்டப்படுகிறது.சுய தொழில் துவங்க முன்வருவோருக்கு, வங்கி கடன்கள் பெறுவதற்காக திட்ட அறிக்கை தயாரிப்பு குறித்து வழிகாட்டப்படுகிறது.மாவட்ட தொழில்மையங்கள் மூலம், நீட்ஸ், யு.ஒய்.இ.ஜி.பி., போன்ற திட்டங்களில், சலுகையுடன் கூடிய கடன் பெற்றுத்தரப்படுகிறது. மாணவர்கள், தொழில் முனைவோர் இன்குபேஷன் மையங்கள் மூலம், ஆராய்ச்சிகள் செய்து வைத்துள்ளனர். அவற்றுக்கு செயல்வடிவம் கொடுத்து, பொருட்களாக மாற்றி, சந்தைப்படுத்துவதற்கும் இ.டி.ஐ.ஐ., கைகொடுக்கிறது.தமிழகம் முழுவதும் 105 பேருக்கு, புதுமைகளை உருவாக்குவதற்காக, மொத்தம் 2.93 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.புதிய கண்டுபிடிப்புகளை சந்தைப்படுத்துவதற்காக, ஐந்து லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்ப டுகிறது. இச்சலுகைகளை பயன்படுத்தி, இளைஞர்கள், புதிய தொழில்முனைவோராக மாறவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X