பொது செய்தி

தமிழ்நாடு

ஏற்றுமதி நிறுவனத்துக்கு ரூ.90 லட்சம் வழங்க ஒப்புதல்: ஆர்பிட்ரேஷன் கவுன்சில் மூலம் தீர்வு

Added : செப் 06, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் பின்னலாடை துறையினர் சந்திக்கும் நிதி சார்ந்த பிரச்னைகளுக்கு, ஆர்பிட்ரேசன் கவுன்சில் விரைந்து சுமூக தீர்வு ஏற்படுத்துகிறது.கொரோனாவுக்குப்பின், கவுன்சிலுக்கு வழக்குகள் வருகை அதிகரித்துள்ளது.திருப்பூர் - காங்கயம் ரோட்டில் உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனம், அமெரிக்க நாட்டு வர்த்தகருக்காக ஆடை தயாரித்து அனுப்பி வைத்தது.ஆடைகளை பெற்றுக்கொண்ட

திருப்பூர்:திருப்பூர் பின்னலாடை துறையினர் சந்திக்கும் நிதி சார்ந்த பிரச்னைகளுக்கு, ஆர்பிட்ரேசன் கவுன்சில் விரைந்து சுமூக தீர்வு ஏற்படுத்துகிறது.கொரோனாவுக்குப்பின், கவுன்சிலுக்கு வழக்குகள் வருகை அதிகரித்துள்ளது.திருப்பூர் - காங்கயம் ரோட்டில் உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனம், அமெரிக்க நாட்டு வர்த்தகருக்காக ஆடை தயாரித்து அனுப்பி வைத்தது.ஆடைகளை பெற்றுக்கொண்ட வர்த்தகர், அதற்கான தொகை 90 லட்சம் ரூபாயை வழங்காமல், ஆறு மாதமாக இழுத்தடித்தார். இதுகுறித்து, ஏற்றுமதி நிறுவன தரப்பினர், ஆர்பிட்ரேஷன் கவுன்சிலில் வழக்குப்பதிவு செய்தனர்.கவுன்சில் தலைவர் கருணாநிதி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம் ஆகியோர், ஏற்றுமதி நிறுவனத்தினரையும், திருப்பூரில் இயங்கும் அமெரிக்க வர்த்தக முகமை நிறுவனத்தினரையும் அழைத்து பேசினர்.இதையடுத்து, ஏற்றுமதி நிறுவனத்துக்கு உரிய தொகையை மூன்று தவணையாக வழங்குவதாக, வர்த்தக முகமை நிறுவனத்தினர் உறுதி அளித்தனர்.அதன்படி, முதல் தவணையாக, 33 லட்சம் ரூபாய், ஏற்றுமதி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதி தொகையை விரைவில் வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.''பின்னலாடை துறையினர், தாங்கள் பயன்படுத்தும் அனைத்து ரசீதுகளிலும், ஆர்பிட்ரேசன் விதிமுறைகளை தவறாமல் அச்சிட வேண்டும்; ஹார்வி ரோட்டில் உள்ள 'சைமா' அலுவலகத்தில் இயங்கும் கவுன்சிலை நேரில் அணுகி, விதிமுறைகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.இதன்மூலம், நிதி சார் பிரச்னைகள் எழும்போது, கவுன்சில் தலையிட்டு, எளிதாக தீர்வு காணமுடியும்'' என, ஆர்பிட்ரேசன் நிர்வாகிகள் அறிவுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X