பொது செய்தி

இந்தியா

புழக்கத்தில் போலி தடுப்பூசி? மத்திய அரசு கடும் எச்சரிக்கை!

Updated : செப் 06, 2021 | Added : செப் 06, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: போலியான கொரோனா தடுப்பூசிகள் புழக்கத்தில் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ள நிலையில், உண்மையான தடுப்பூசிகளை அடையாளம் காண்பது தொடர்பாக மாநில அரசுகளுக்கு விளக்கம் அளித்து, மத்திய அரசு கடிதம் எழுதிஉள்ளது.தற்போது நம் நாட்டில் கொரோனாவுக்கு எதிராக மூன்று வகையான தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன. 'சீரம்' நிறுவனத்தின் கோவிஷீல்டு, 'பாரத் பயோடெக்'

புதுடில்லி: போலியான கொரோனா தடுப்பூசிகள் புழக்கத்தில் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ள நிலையில், உண்மையான தடுப்பூசிகளை அடையாளம் காண்பது தொடர்பாக மாநில அரசுகளுக்கு விளக்கம் அளித்து, மத்திய அரசு கடிதம் எழுதிஉள்ளது.



latest tamil news


தற்போது நம் நாட்டில் கொரோனாவுக்கு எதிராக மூன்று வகையான தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன. 'சீரம்' நிறுவனத்தின் கோவிஷீல்டு, 'பாரத் பயோடெக்' நிறுவனத்தின் கோவாக்சின் மற்றும் ரஷ்ய தயாரிப்பான 'ஸ்புட்னிக் - வி' ஆகிய தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், கோவாக்சின் உட்பட சில தடுப்பூசிகள் போலியாக தயாரிக்கப்பட்டு தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் வினியோகிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது.


latest tamil news


நம் நாட்டிலும் இவை புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருந்தது.'நம் நாட்டில் போலி தடுப்பூசிகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது' என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், உண்மையான தடுப்பூசிகளை எவ்வாறு அடையாளம் காண்பது என்பது தொடர்பாக, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.அதில், தடுப்பூசிகளின் மேல் உள்ள 'லேபிள்' எந்த நிறத்தில் இருக்கும், அதில் நிறுவனங்களின் குறியீடுகள் என்ன என்பது குறித்து விளக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-செப்-202107:26:29 IST Report Abuse
அப்புசாமி பேச்சு பேச்சாகத்தான் இருக்கும். கடும் எச்சரிக்கை.. அது இதுன்னுட்டு ஒரு ஸ்கேலால் கூட அடிக்க மாட்டாங்க.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
06-செப்-202107:23:23 IST Report Abuse
duruvasar தீயசக்திகளின் இந்த முயற்சியை முறியடிக்க வேண்டும்.
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
06-செப்-202112:04:22 IST Report Abuse
Dhurveshவிடுங்கள் இது நேருவின் சதி பின்னர் போலி கலை கண்டுபிடிக்கும் விஷயங்களை அவர் கொண்டுவராமல் பொய் விட்டார் , ஆகவே இது 100 % நேரு காந்தி இந்திரா இவர்களின் கூட்டு சதி தான் காரணம்...
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli,வலிமையான இந்திய கண்டம் ,இந்தியா
06-செப்-202106:59:23 IST Report Abuse
NicoleThomson இதிலும் அவர்களின் ஆட்டம் ஆரம்பித்து விட்டதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X