சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

கமிஷனை கறக்க அதிகாரி காட்டும் கறார்!

Updated : செப் 12, 2021 | Added : செப் 06, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
நாயர் தந்த சூடான மெது வடையை, கெட்டி சட்னியில் தோய்த்தபடியே, ''அடக்கி வாசிங்கன்னு சொல்லி, அனுப்பியிருக்காருங்க...'' என, பெஞ்ச் தகவலை பேச ஆரம்பித்தார், அந்தோணிசாமி.''யாருக்கு யாருவே இப்படி உத்தரவு போட்டது...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன், அடிக்கடி சர்ச்சையில சிக்குறாரே... சமீபத்துல, 'அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வெட்டியா சம்பளம்
 டீ கடை பெஞ்ச்

நாயர் தந்த சூடான மெது வடையை, கெட்டி சட்னியில் தோய்த்தபடியே, ''அடக்கி வாசிங்கன்னு சொல்லி, அனுப்பியிருக்காருங்க...'' என, பெஞ்ச் தகவலை பேச ஆரம்பித்தார், அந்தோணிசாமி.

''யாருக்கு யாருவே இப்படி உத்தரவு போட்டது...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன், அடிக்கடி சர்ச்சையில சிக்குறாரே... சமீபத்துல, 'அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வெட்டியா சம்பளம் வாங்குறாங்க... அரசு வருமானத்துல பெரும் பகுதி, அவங்க சம்பளம், பென்ஷனுக்கு தான் போகுது'ங்கிற மாதிரி நாக்குல பல்லு போட்டு பேசிட்டாருங்க...

''அரசு ஊழியர்கள் எல்லாம், அமைச்சருக்கு எதிரா கொந்தளிச்சிட்டு இருக்காங்க... இதனால, முதல்வர் ஸ்டாலின், அமைச்சரைக் கூப்பிட்டு, அரசு ஊழியர்கள் விவகாரத்துல அடக்கி வாசிக்கும்படி உத்தரவு போட்டிருக்காரு...

''அதோட, அவங்களுக்கு சீக்கிரமே அகவிலைப்படி உயர்வையும் முதல்வர் அறிவிக்க இருக்காருங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''இந்த வருஷமும் அரவை துவங்க ஆர்வம் காட்ட மாட்டேங்கறா ஓய்...'' என்ற குப்பண்ணா தொடர்ந்தார்...

''மதுரை, அலங்காநல்லுார்ல தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை இருக்கு... விவசாயிகளுக்கு கரும்பு தொகை நிலுவை வச்சதால, கரும்பு சாகுபடி குறைஞ்சு, ரெண்டு வருஷமா அரவையே நடக்கலை...

''போன வருஷம், 20 கோடி ரூபாய் வரைக்கும், விவசாயிகளுக்கு பாக்கியை, 'செட்டில்' பண்ணா ஓய்...

''இந்த வருஷம் மழை, தண்ணி எல்லாம் நல்லா இருக்கறதால, விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்ய ஆர்வமா இருக்கா...

''ஆனாலும், அரவை நடக்காம இருந்த ஆலையில இருந்து, மாற்று பணியா வெளியிடங்களுக்கு போன பணியாளர்களை திரும்ப அழைக்கறதுலயும், விவசாயிகளை ஊக்குவிக்கறதுலயும் ஆலை நிர்வாகமும், சர்க்கரை கமிஷனும் ஆர்வம் காட்டாம தேமேன்னு இருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''ஓட்டல்களிடம் கறார் காட்டி, கமிஷன்ல மஞ்ச குளிக்காரு வே...'' என, கடைசி தகவலுக்கு மாறினார், அண்ணாச்சி.

''யாரைச் சொல்றீங்க பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.

''அரசு போக்குவரத்துக் கழக கோவை கோட்ட அதிகாரி ஒருத்தர், ஈரோடு, சேலம், மதுரை, தேனின்னு வெளியூர் போற பஸ்களை, குறிப்பிட்ட சில ஓட்டல்கள்ல தான் நிப்பாட்டணும்னு, கீழ்மட்ட அதிகாரிகள் வழியா டிரைவர், கண்டக்டர்களுக்கு உத்தரவு போட்டிருக்காரு வே...

''அவர் குறிப்பிடுற நெடுஞ்சாலையோர ஓட்டல்கள்ல இருந்து, அதிகாரிக்கு மாசா மாசம் மாமூல் வந்துடுது... சில ஓட்டல்கள்ல இருந்து கமிஷன் சரியா வராட்டி, அங்கன ஒரு டைம்கீப்பரை போட்டு, பஸ்களை நிறுத்த விடாம தடுத்துடுவாரு...

''ஓட்டல் தரப்பு கமிஷனை சரியா வெட்டுனதும், டைம் கீப்பரை திரும்ப அழைச்சுக்குவாரு வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.

டீக்கடை ரேடியோவில், 'எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...' என்ற பாடல் ஒலிக்க, ''ஆறுமுக பெருமானே... அனாதரட்சகா...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
06-செப்-202115:51:45 IST Report Abuse
D.Ambujavalli உள்ளாட்சி தேர்தல் 'பணிகளுக்கு ' அரசு ஊழியர்கள்தான் வேண்டும் இப்படி தாக்கினால், நிதியமைச்சரா பூத் வேலைக்கு வருவார்?
Rate this:
Cancel
jeans bala - CHENNAI,இந்தியா
06-செப்-202114:22:10 IST Report Abuse
jeans bala கொரோன காலத்தில் வீட்டில் இருந்துகொண்டே முழு சம்பளத்தை வாங்கினார்கள் ஆசிரியர்கள் மற்றும் அரசு வேலை பார்ப்பவர் ஆனால் தனியார் கம்பெனியில் சம்பளமே பாதி தான் ஆந்திராவில் அரசு பாதி சம்பளம் கொடுத்தார்கள் ஆனால் இங்கு முழு சம்பளம் ஆசிரியர்களுக்கு பாதி சம்பளம் கொடுத்திருக்கலாம்
Rate this:
Cancel
Vaiyapuri Rajendran - Chennai,இந்தியா
06-செப்-202112:09:56 IST Report Abuse
Vaiyapuri Rajendran தமிழ் நாட்டில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை இயக்கத்துக்கு கொண்டு வர வேண்டும்.....கரும்பு விவசாயிகள், கூலி தொழிலாளர்கள், வாகன உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் , ஆலை ஊழியர்கள், போன்ற அனைத்து மக்களுக்குமான இந்த வேளாண் சார்ந்த தொழிலுக்கு முக்கியத்துவம் அளித்து குறைகளை நிவர்த்தி செய்து இனிப்பான சர்க்கரையை உற்பத்தி செய்யும் தொழிலை பாதுகாக்க வேண்டும்...சர்க்கரை ஆலைகள் நலிவடைந்து உள்ளதை காரணம் காட்டி அறைவையை நிறுத்தினால் சர்க்கரை விலை பெட்ரோல் விலை போல வானத்தில் இருக்கும் நிலை உண்டாகும்.... அது போல அரசு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் அனைத்தும் பயண வழி உணவகங்களில் நிறுத்துவதில் கட்டுப்பாடுகள் உள்ளன...அரசு போக்குவரத்துக்கழகம் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இணைந்து தேசிய நெடுஞ்சாலைகளில் 200 கிலோ மீட்டருக்கு ஒரு உணவகம் தரமான சுத்தமான சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து வழங்கும் வகையில் அமைத்து அனைத்து பேருந்துகளும் இந்த உணவகத்தில் .அட்டுமே நிறுத்த வேண்டும் என்று கட்டாயமாக உத்தரவு வழங்கினால் பயணிகளுக்கும் நல்லது...தரமற்ற உணவகங்களில் நிறுத்துவதால் பயணிகள் ஓட்டுநர் நடத்துநர் களிடம் வாக்குவாதம் செய்வதையும் தவிர்க்கலாம்..போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X