பொது செய்தி

தமிழ்நாடு

கல் குவாரிகள் மீது பாய்ந்தது வழக்கு! ஊத்துக்குளியில் அதிரடி

Added : செப் 06, 2021
Share
Advertisement
திருப்பூர்:ஊத்துக்குளி தாலுகா பகுதியில், முறைகேடாக இயங்கும், 40 கல்குவாரிகள் மீது ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.ஊத்துக்குளி தாலுகாவுக்கு உட்பட்ட மொரட்டுப்பாளையம், ஏ.பெரியபாளையம் பகுதியில் கல் குவாரிகளில், விதிமுறையை மீறி, கல் வெட்டி எடுக்கப்பட்டதாக, 2017ம் ஆண்டு புகார் எழுந்தது.இதுதொடர்பாக, சிலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

திருப்பூர்:ஊத்துக்குளி தாலுகா பகுதியில், முறைகேடாக இயங்கும், 40 கல்குவாரிகள் மீது ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.ஊத்துக்குளி தாலுகாவுக்கு உட்பட்ட மொரட்டுப்பாளையம், ஏ.பெரியபாளையம் பகுதியில் கல் குவாரிகளில், விதிமுறையை மீறி, கல் வெட்டி எடுக்கப்பட்டதாக, 2017ம் ஆண்டு புகார் எழுந்தது.இதுதொடர்பாக, சிலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஒரு சில கல் குவாரிகள் விதிமுறையை மீறி இயங்கியது உறுதி செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.அபராதம் செலுத்தாமல், அனைத்து குவாரிகளையும் முறைப்படுத்த வேண்டுமென, கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், குவாரிகளின் தற்போதைய நிலை குறித்து கண்டறிய, வக்கீல் குழு அமைக்கப்பட்டது.கடந்த மாதம், இக்குழுவினர் வருவாய்த்துறையினருடன் சென்று, மூன்று நாட்கள் ஆய்வு நடத்தி, அறிக்கையை கோர்ட்டில் சமர்ப்பித்தனர்.40 குவாரிகள் மீது புகார்இச்சூழலில், மொரட் டுப்பாளையம், ஏ.பெரியபாளையம் கிராமத்தில் உரிமம் இல்லாமலும், நிபந்தனைகளை மீறியும் செயல்பட்ட கல்குவாரிகள் கண்டுபிடிக்கப்பட்டன.ஊத்துக்குளி தாசில்தார் ஜெகதீஷ்குமார் புகார் அளித்ததையடுத்து, ஊத்துக்குளி போலீசார், 40 கல் குவாரிகள் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.தாசில்தார் ஜெகதீஷ்குமாரிடம் கேட்டதற்கு, ''முறைகேடாக இயங்கும் கல்குவாரிகள் குறித்து பட்டியல் கொடுத்துள்ளனர். புகார் கொடுப்பதற்கான பணி நடந்து வருகிறது. முடிந்த பின், முழுமையாக சொல்ல முடியும்,'' என்றார்.பல ஆயிரம் கோடி இழப்பு

முறைகேடாக இயங்கிய கல்குவாரிகள் குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மவுனமாக இருந்து வந்தனர். வக்கீல் குழு ஆய்வு செய்து, கல்குவாரிகளின் முறைகேடுகள் குறித்து அறிக்கையை கோர்ட்டில் சமர்ப்பித்தது. குவாரிகளை அவ்வப்போது ஆய்வு செய்யாததால் நிர்வாகத்துக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, முறைகேடாக இயங்கும் குவாரிகளை மூட திருப்பூர் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த குவாரிகளுக்கு எதிராக மட்டுமில்லாமல், அவற்றை செயல்பட அனுமதித்த கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய் இழப்பை அவர்களிடம் வசூலிக்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. தற்போது, அதிகாரிகள் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X