பொது செய்தி

தமிழ்நாடு

தலைமையாசிரியர் உருக்கம்

Added : செப் 06, 2021
Share
Advertisement
பல்லடம்:பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், 650க்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தமிழக அரசு உத்தரவின்படி, 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கியுள்ளன.சேர்க்கை பெற்ற மாணவர்கள் சிலர் பள்ளிக்கு வராமல் இருந்தது குறித்து, தலைமை ஆசிரியர் புஷ்பலதாவிடம் ஆசிரியர்கள் தெரிவித்தனர். சக ஆசிரியர்களுடன், மாணவர்களின் வீடு தேடிச் சென்ற தலைமை ஆசிரியர்

பல்லடம்:பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், 650க்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தமிழக அரசு உத்தரவின்படி, 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கியுள்ளன.சேர்க்கை பெற்ற மாணவர்கள் சிலர் பள்ளிக்கு வராமல் இருந்தது குறித்து, தலைமை ஆசிரியர் புஷ்பலதாவிடம் ஆசிரியர்கள் தெரிவித்தனர். சக ஆசிரியர்களுடன், மாணவர்களின் வீடு தேடிச் சென்ற தலைமை ஆசிரியர் கள ஆய்வு மேற்கொண்டார்.அவர் கூறுகையில், ''நடப்பு கல்வி ஆண்டு சேர்க்கை பெற்ற மாணவர்களில் சிலர், பள்ளிக்கு வராமல் வேலைக்கு சென்று வருவதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், 'ஆப்சென்ட்' ஆன மாணவர்களின் பட்டியல் தயாரித்து, ஆசிரியர்களுடன் சென்று அவர்களது வீடுகளில் ஆய்வு செய்தோம்.அதில் சில மாணவர்கள், பள்ளிக்கு வராமல் வேலைக்கு சென்று வருவது உறுதியானது. பெற்றோர்களும் இதற்கு உறுதுணையாக இருப்பது வேதனையை அளிக்கிறது. குழந்தை தொழிலாளராக மாணவர்களை வேலைக்கு அனுப்புவது சட்டப்படி குற்றம். வேலைக்கு செல்வதை விடுத்து, மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார். தலைமையாசிரியை வீடு தேடி சென்றுவேண்டுகோள் விடுத்ததையடுத்து, மாணவர்கள் பள்ளிக்கு வரத்துவங்கியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X