விவசாயிகள் கவலை

Added : செப் 06, 2021
Share
Advertisement
பொங்கலுார்:''இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட தயங்குகின்றனர்'' என்கின்றனர் விவசாயிகள்.இந்தாண்டு சின்ன வெங்காய சாகுபடி பரப்பு மற்றும் மகசூல் அதிகரிப்பால், கிலோ 12 ரூபாய்க்கு வியாபாரிகள் கேட்பதாக விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். உற்பத்திச் செலவைக்கூட ஈடுகட்ட முடியாமல் விவசாயிகள் நஷ்டமடைந்து வருகின்றனர்.வெங்காய விவசாயிகள் தொடர்ந்து நஷ்டம் அடைவது அதிகரித்து

பொங்கலுார்:''இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட தயங்குகின்றனர்'' என்கின்றனர் விவசாயிகள்.இந்தாண்டு சின்ன வெங்காய சாகுபடி பரப்பு மற்றும் மகசூல் அதிகரிப்பால், கிலோ 12 ரூபாய்க்கு வியாபாரிகள் கேட்பதாக விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். உற்பத்திச் செலவைக்கூட ஈடுகட்ட முடியாமல் விவசாயிகள் நஷ்டமடைந்து வருகின்றனர்.வெங்காய விவசாயிகள் தொடர்ந்து நஷ்டம் அடைவது அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க அரசு எண்ணெய் வித்துப் பயிர் சாகுபடியை ஊக்குவிக்க முயற்சி எடுக்க வேண்டும். சமையல் எண்ணெய் வகைகளில் பெரும்பகுதி இறக்குமதி மூலமே ஈடு செய்யப்படுகிறது. எனவே, எண்ணெய் வித்து பயிர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.ஆட்கள் பற்றாக்குறை, போதிய விலை கிடைக்காமை போன்றவையே எண்ணெய் வித்துப் பயிர் சாகுபடியை விவசாயிகள் புறக்கணிக்கக் காரணம். விவசாயத்தில் நவீன இயந்திரங்களின் செயல்பாட்டை அதிகரிப்பது, எண்ணெய் வித்துப் பயிர்களுக்கு அதிக பட்ச விலை நிர்ணயம் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்தால் விவசாயிகள் தாமாக முன்வந்து எண்ணெய் வித்து பயிர் சாகுபடிக்கு மாறி விடுவர்.விவசாயிகள் கூறுகையில், ''விலை உயர்ந்தால் மட்டும் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளைவிதித்து விவசாயிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறது. ஆனால், விலை சரிந்து விவசாயிகள் நஷ்டம் அடைவதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இளைஞர்கள் விவசாயத்தை விட்டு ஓடுகின்றனர்'' என்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X