பொது செய்தி

இந்தியா

சாலை விபத்தில் இழப்பீடு எளிதாக்கியது பீஹார் அரசு

Added : செப் 06, 2021
Share
Advertisement
பாட்னா-சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் படுகாயம் அடைந்தவர்கள் நிவாரண உதவிகளைப் பெற, பல ஆண்டுகள் சட்ட போராட்டம் நடத்த வேண்டிய நிலை உள்ளது.இந்நிலையில், சாலை போக்குவரத்து சட்டத்தில் திருத்தம் செய்து, நிவாரண தொகையை பெறும் நடைமுறையினை, முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., ஆட்சி நடக்கும் பீஹார் அரசு எளிதாக்கி உள்ளது.வரும்

பாட்னா-சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் படுகாயம் அடைந்தவர்கள் நிவாரண உதவிகளைப் பெற, பல ஆண்டுகள் சட்ட போராட்டம் நடத்த வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில், சாலை போக்குவரத்து சட்டத்தில் திருத்தம் செய்து, நிவாரண தொகையை பெறும் நடைமுறையினை, முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., ஆட்சி நடக்கும் பீஹார் அரசு எளிதாக்கி உள்ளது.வரும் 15ம் தேதி முதல் இந்த புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. இதன்படி, சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு 15 நாட்களுக்குள் இடைக்கால நிவாரணமாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். படுகாயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் இடைக்கால நிவாரணம் வழங்கப்படும்.

விபத்து ஏற்படுத்திய வாகனத்திற்கு காப்பீடு இருந்தால், இந்த இடைக்கால நிவாரண தொகையை மாநில அரசே வழங்கும். விபத்து ஏற்படுத்தியவரின் காப்பீட்டு நிறுவனம், இழப்பீடு வழங்க மறுத்து நீதிமன்றத்தை நாடினால், பாதிக்கப்பட்டவருக்கு மாநில அரசு சட்ட உதவிகளை செய்யும் விதமாக சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X