கோர்ட் செய்தி

தமிழ்நாடு

7 ஆண்டுக்கு பிறகு சிக்கிய  தம்பதிக்கு ஜாமின் மறுப்பு 

Added : செப் 06, 2021
Share
Advertisement
கோவை:மோசடி வழக்கில் ஏழு ஆண்டுக்கு பிறகு சிக்கிய கணவன்-மனைவி ஜாமின் மனு, 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டது.சாய்பாபாகாலனியில், 2011- 12ல் செயல்பட்டு வந்த சூர்யா ஈமு பார்ம் என்ற நிதி நிறுவனம், 193 பேரிடம், 3.24 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கு, கோவை டான்பிட் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.கைது செய்யப்பட்ட அதன் பங்குதாரர்கள் கிருஷ்ணமூர்த்தி, 46, இவரது மனைவி நிர்மலா தேவி,41, தேவராஜ், பூபதி

கோவை:மோசடி வழக்கில் ஏழு ஆண்டுக்கு பிறகு சிக்கிய கணவன்-மனைவி ஜாமின் மனு, 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டது.சாய்பாபாகாலனியில், 2011- 12ல் செயல்பட்டு வந்த சூர்யா ஈமு பார்ம் என்ற நிதி நிறுவனம், 193 பேரிடம், 3.24 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கு, கோவை டான்பிட் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.

கைது செய்யப்பட்ட அதன் பங்குதாரர்கள் கிருஷ்ணமூர்த்தி, 46, இவரது மனைவி நிர்மலா தேவி,41, தேவராஜ், பூபதி ஆகியோர், ஜாமினில் விடுவிக்கப்பட்டு, விசாரணையின் போது ஆஜராகி வந்தனர்.குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, கிருஷ்ணமூர்த்தி, நிர்மலாதேவி ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகாமல்,ஏழு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தனர்.இவர்களுக்கு 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த ஜூலை, 14ல் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.ஜாமினில் விடுவிக்க கோரி, கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். ஜாமினில் விடுவித்தால் மீண்டும் தலைமறைவாகி விடுவர் என்று, அரசு தரப்பு வக்கீல் மாணிக்கராஜ் எதிர்ப்பு தெரிவித்தார். இருவரது ஜாமின் மனுவை, நீதிபதி ரவி 'டிஸ்மிஸ்' செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X