நான்கு முக்கிய கோவில்களில் இன்று தரிசனத்துக்கு தடை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நான்கு முக்கிய கோவில்களில் இன்று தரிசனத்துக்கு தடை

Added : செப் 06, 2021
Share
கோவை:கொரோனா தொற்று தவிர்க்கும் பொருட்டு, கோவை மாவட்டத்தில் நான்கு முக்கிய கோவில்களில் இன்று, தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.கொரோனா நோய் தொற்று தடுக்கும் நடவடிக்கையாக, வெள்ளி, சனி ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில் நடை அடைக்கப்படுகிறது. இது மட்டுமின்றி, மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் சாலை சந்திப்புகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடை அடைப்பது உள்ளிட்ட

கோவை:கொரோனா தொற்று தவிர்க்கும் பொருட்டு, கோவை மாவட்டத்தில் நான்கு முக்கிய கோவில்களில் இன்று, தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.கொரோனா நோய் தொற்று தடுக்கும் நடவடிக்கையாக, வெள்ளி, சனி ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில் நடை அடைக்கப்படுகிறது. இது மட்டுமின்றி, மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் சாலை சந்திப்புகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடை அடைப்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் செப்.,1 முதல் அமல் செய்யப்பட்டுள்ளன.அமாவாசையான இன்று, கோவில்களில் அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு, முக்கிய கோவில்களில் தரிசனத்துக்கு தடை விதித்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.பேரூர் பட்டீஸ்வரர் கோவில், மருதமலை முருகன் கோவில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில்களில் இன்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இந்த கோவில்களில் சுவாமிக்கு பூஜைகள் தொடர்ந்து நடைபெறும்.அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக பின்பற்றி, மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, கலெக்டர் சமீரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X