பொது செய்தி

இந்தியா

'ஆப்கன் அரசியலில் அதிரடி கூடாது' : முன்னாள் தூதர்கள் கருத்து

Updated : செப் 06, 2021 | Added : செப் 06, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி-'ஆப்கானிஸ்தான் அரசியல் நிலவரம் நாளுக்கு நாள் மாறுதலுக்கு உள்ளாகி வரும் நிலையில், இந்தியா அதிரடியாக எதையும் செய்யாமல் பொறுமையுடன் நிலைமையை கவனிப்பதே தற்போதைக்கு சிறந்த வழி' என, முன்னாள் துாதர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை சமீபத்தில் கைப்பற்றினர். அங்கு ஆட்சி அமைக்கும் பணியில்

புதுடில்லி-'ஆப்கானிஸ்தான் அரசியல் நிலவரம் நாளுக்கு நாள் மாறுதலுக்கு உள்ளாகி வரும் நிலையில், இந்தியா அதிரடியாக எதையும் செய்யாமல் பொறுமையுடன் நிலைமையை கவனிப்பதே தற்போதைக்கு சிறந்த வழி' என, முன்னாள் துாதர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.



latest tamil news



தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை சமீபத்தில் கைப்பற்றினர். அங்கு ஆட்சி அமைக்கும் பணியில் தலிபான் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யின் இயக்குனர் ஜெனரல் பைஸ் ஹமீத், ஆப்கானிஸ்தான் விரைந்துள்ளார்.இவரது திடீர் பயணத்தின் வாயிலாக, சர்வதேச சமூகத்தினர் ஏற்றுக் கொள்ளும் வகையிலான அரசை அமைக்க வேண்டிய அழுத்தம் தலிபான்களுக்கு உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

ஆப்கன் நிலவரம் குறித்து நம் நாட்டின் முன்னாள் துாதர்கள் சிலர் கூறியதாவது:ஆப்கானிஸ்தானில் எப்படிப்பட்ட அரசு அமைய உள்ளது என்பதை இந்தியா பொறுமையாக கவனிப்பதே இப்போதைக்கு சிறந்த வழியாக இருக்கும். இந்த நேரத்தில் அதிரடியான நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது.பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,க்கும், தலிபான்களுக்கும் உள்ள நெருக்கம் அனைவரும் அறிந்தது. ஹக்கானி பயங்கரவாதிகள் தலிபான்களுக்கு மிக நெருக்கமாக உள்ளனர். ஆப்கனில் அமையவுள்ள புதிய அரசில் இவர்களின் தலையீடு நிச்சயம் இருக்கும்.


latest tamil news


இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத குழுக்களை ஆப்கன் மண்ணில் வளர்த்துவிடக் கூடாது என்பதை, தலிபான்களிடம் நம் அரசு ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளது.ஆப்கன் அரசியல் நிலையில் நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இந்த நேரத்தில் அவசரப்பட்டு நாம் கருத்து தெரிவிக்க கூடாது.இவ்வாறு அவர்கள்கூறினர்

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
07-செப்-202103:17:51 IST Report Abuse
meenakshisundaram அவனவன் உடுக்க துணிக்கு அலைகிறான் இவிங்களோ எட்டு முழ வேஷ்டியை கழுத்திலே மாட்டிக்கிட்டு அலையுறான் ?
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
06-செப்-202115:15:29 IST Report Abuse
r.sundaram இந்தியா எவ்வளவு சொல்லியும் கேட்காமல்,ஆப்கனிஸ்தான் விஷயத்தில் பாகிஸ்தானின் உதவி தேவை என்பதாக நினைத்து, பாகிஸ்தானுக்கு அமெரிக்க எண்ணற்ற உதவிகளை செய்து வந்தது. அனால் தற்போது உண்மை எளிவந்து விட்டது. ஆப்கனிஸ்தான் விஷயத்தில் தாலிபான்களுக்கு ஆதரவாகத்தான் பாகிஸ்தான் இருந்திருக்கிறது. அமெரிக்காவின் உதவிகளை கொண்டு அது தன்னை வளப்படுத்தி கொண்டதே தவிர, அமெரிக்க எதிர்பார்த்த படி விஷயங்கள் நடக்கவில்லை. சரியான ஏமாந்த சோணகிரி அமெரிக்க.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
06-செப்-202115:08:52 IST Report Abuse
r.sundaram ஆபகானிஸ்தானை விட்டு அமெரிக்க வெளியேறியது, இந்தியாவுக்கு செக் வைக்கவா? அங்கிருந்து வெளியேறும்போதே அமெரிக்காவுக்கு தெரியாதா தலிபான்கள் ஆபகானிஸ்தானை பிடித்து விடுவார்கள் என்பது? இந்தியாவுக்கு ஏற்கனவே தலைவலியாக பாகிஸ்தான் இருக்கும்போது, இந்த தீவிரவாதிகள் ஆப்கனிஸ்தானுக்குள் ஆட்சிக்கு வந்தால் அவர்கள் உதவியுடன் இந்தியாவின் எல்லைகளில் பாகிஸ்தான் சீண்டக்கூடும் அல்லவா? இந்தியா இப்போதைய சூழலில் வளர்ந்து வல்லரசாகி விட்டால், அமெரிக்காவின் உலகத்தின் தலைவன் என்ற பட்டம் பறந்து விடுமே என்ற அச்சத்தினால், மறைமுகமாக இந்தியாவுக்கு செக் வைக்க அமெரிக்க செய்த தந்திரமோ இது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X