பொது செய்தி

தமிழ்நாடு

நடைபாதை நடக்கவா... வாகனம் நிறுத்தவா! நூறடி ரோட்டில் அப்பட்டமாக ஆக்கிரமிப்பு

Added : செப் 06, 2021
Share
Advertisement
பார்க்கிங் இடமானது நடைபாதைகாந்திபுரம், நுாறடி ரோட்டில், நடைபாதைகளை ஆக்கிரமித்து, இரு சக்கர வாகனங்கள் பார்க் செய்யப்படுவதால், பாதசாரிகள் அவதிப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசலில், அச்சத்துடன், சாலையில் நடந்து செல்கின்றனர்.- சுரேஷ், காந்திபுரம்.ஆக்கிரமிப்புகளால் அவதிபாப்பநாயக்கன்பாளையம் மின் மயானத்தில் இருந்து, அவிநாசி ரோடு வரை, சாலையின் இருபுறமும் உள்ள,

பார்க்கிங் இடமானது நடைபாதைகாந்திபுரம், நுாறடி ரோட்டில், நடைபாதைகளை ஆக்கிரமித்து, இரு சக்கர வாகனங்கள் பார்க் செய்யப்படுவதால், பாதசாரிகள் அவதிப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசலில், அச்சத்துடன், சாலையில் நடந்து செல்கின்றனர்.- சுரேஷ், காந்திபுரம்.

ஆக்கிரமிப்புகளால் அவதிபாப்பநாயக்கன்பாளையம் மின் மயானத்தில் இருந்து, அவிநாசி ரோடு வரை, சாலையின் இருபுறமும் உள்ள, ஆக்கிரமிப்பு கடைகளால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.- முத்துராஜ், பாப்பநாயக்கன்பாளையம்.

விழும் முன் மாற்றணும்மாநகராட்சி, 74வது வார்டுக்கு உட்பட்ட, ராமநாதபுரம், சுங்கம் சிந்தாமணி அருகே, ஸ்ரீநகர் முதல் வீதியில் உள்ள, மின் கம்பம்(எண்: 1) சிதிலமடைந்து விழும் நிலையில் உள்ளது. மின் வாரியத்தில் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இக்கம்பம் விழுந்து மின் விபத்து ஏற்படும் முன், இதை அகற்றிவிட்டு, புது கம்பம் அமைக்க வேண்டும்.- ஜெயபிரகாஷ், ஸ்ரீநகர்.

சாலை வசதியில்லைமாநகராட்சி, 27வது வார்டுக்கு உட்பட்ட, சின்னவேடம்பட்டி, வசந்தம் நகரில், தார் சாலை வசதி இல்லாததால், மழை காலங்களில், சாலை சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது; வீடுகளுக்கு முன், தேங்கும் நீரால், நடந்து செல்லக் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.- பிரியா, வசந்தம் நகர்.

சாக்கடை கால்வாய் அடைப்புஅவிநாசி ரோடு, லட்சுமி மில்ஸ், டி.பி.எப்., வீதி அருகில், பிரதான சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- விநாயகம், டி.பி.எப்., வீதி.

சாலையை சீரமைக்கணும்மாநகராட்சி, 30வது வார்டுக்கு உட்பட்ட, விளாங்குறிச்சி ரோடு, விநாயகபுரம், பாரதியார் வீதியில், குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக, கான்கிரீட் சாலை தோண்டப்பட்டது. பணி முடிந்து நீண்ட நாட்களாகியும், மீண்டும் சாலை சீரமைக்கப்படவில்லை; சேறும் சகதியுமாக மாறிவிட்டது.- செந்தில்குமார், பாரதியார் வீதி.

விளக்கு எரிவதில்லைமாநகராட்சி, 32வது வார்டுக்கு உட்பட்ட, விளாங்குறிச்சி, அண்ணாமலை நகரில் உள்ள, மின் கம்பத்தில் (எண்: 6) கடந்த சில மாதங்களாக, விளக்கு எரிவதில்லை.- சதீஷ்குமார், அண்ணாமலை நகர்.

குப்பை அள்ளுவதில்லைமாநகராட்சி, 13வது வார்டுக்கு உட்பட்ட, வேலாண்டிபாளையம், சாஸ்திரி ரோடு, ஜானகி நகரில் துாய்மை பணி மேற்கொள்ளப்படுவதில்லை. இதனால், இப்பகுதியில் சாக்கடை கால்வாயில், குப்பை குவிந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது.- ஜோசப், ஜானகி நகர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X