பொது செய்தி

தமிழ்நாடு

கோவை கலெக்டருக்கு 'பில்லா' ஓவியம் பரிசு

Updated : செப் 06, 2021 | Added : செப் 06, 2021
Share
Advertisement
கோவை: சிறைக்கைதி வழங்கிய ஓவியத்தை பெற்றுக் கொண்ட கலெக்டர், நெகிழ்ச்சி அடைந்தார்.சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின், 150வது பிறந்த தினத்தை முன்னிட்டு கோவை மத்திய சிறை வளாகத்தில், விழா கொண்டாடப்பட்டது.சிறை வளாகத்தில் அமைந்துள்ள வ.உ.சி., இழுத்த செக்கு அருகே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு, கலெக்டர் சமீரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.
 கோவை கலெக்டருக்கு 'பில்லா' ஓவியம் பரிசு

கோவை: சிறைக்கைதி வழங்கிய ஓவியத்தை பெற்றுக் கொண்ட கலெக்டர், நெகிழ்ச்சி அடைந்தார்.

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின், 150வது பிறந்த தினத்தை முன்னிட்டு கோவை மத்திய சிறை வளாகத்தில், விழா கொண்டாடப்பட்டது.சிறை வளாகத்தில் அமைந்துள்ள வ.உ.சி., இழுத்த செக்கு அருகே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு, கலெக்டர் சமீரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மரியாதை செலுத்தினர். இதன்பின் சிறை வளாகத்துக்குள் சென்ற கலெக்டர், அப்பகுதியை சுற்றிப்பார்த்த பின் வெளியில் வந்தார்.

அப்போது அவரிடம் சிறைத்துறை எஸ்.பி., செந்தாமரைகண்ணன், பில்லா என்ற சிறைக்கைதி கலெக்டரின் ஓவியத்தை வரைந்ததை கூறினர். கலெக்டருக்கு ஓவியத்தை வழங்க ஆர்வமாய் இருந்ததும், அவர் சேலம் சிறைக்கு மாற்றப்பட்டதால், அந்த ஓவியத்தை கலெக்டர் வரும் போது வழங்குமாறு கூறிச்சென்றதும் தெரிவிக்கப்பட்டது.

அந்த ஓவியத்தை, சிறைத்துறை கோவை சரக டி.ஐ.ஜி., சண்முகசுந்தரம், கலெக்டரிடம் வழங்கினார். நெகிழ்ச்சி அடைந்த கலெக்டர், சிறைக்கைதி பில்லாவுக்கு சமூக வலைதளம் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X