பொது செய்தி

தமிழ்நாடு

ஆவின் முகவர்கள் உரிமம் ரத்து முடிவு: தற்காலிகமாக ரத்து என்கிறார் பொது மேலாளர்

Added : செப் 06, 2021
Share
Advertisement
கோவை:கோவையிலுள்ள ஆவின் பால் நிறுவனம், 50 லிட்டருக்கு கீழே வர்த்தகம் செய்யும் முகவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தது. அதை மறு பரிசீலனை செய்வதாக, தற்போது தெரிவித்துள்ளது.ஆவின் பால் நிறுவனம் கோவை- சிறுவாணி சாலையிலுள்ள பச்சாபாளையத்தில் செயல்படுகிறது. இந்நிறுவனம், 27.08.2021ல் ஆவின் முகவர்களுக்கு வெளியிட்ட ஒரு அறிவிப்பில், 50 லிட்டருக்கு கீழே பால் வினியோகம்

கோவை:கோவையிலுள்ள ஆவின் பால் நிறுவனம், 50 லிட்டருக்கு கீழே வர்த்தகம் செய்யும் முகவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தது. அதை மறு பரிசீலனை செய்வதாக, தற்போது தெரிவித்துள்ளது.ஆவின் பால் நிறுவனம் கோவை- சிறுவாணி சாலையிலுள்ள பச்சாபாளையத்தில் செயல்படுகிறது. இந்நிறுவனம், 27.08.2021ல் ஆவின் முகவர்களுக்கு வெளியிட்ட ஒரு அறிவிப்பில், 50 லிட்டருக்கு கீழே பால் வினியோகம் செய்யும் முகவர்களின் உரிமம், ரத்து செய்யப்படும் என்று கூறியிருந்தது. முகவர்கள், ஆவின் நிறுவன அதிகாரிகளை தொடர்பு கொண்டு வேண்டுகோள் விடுத்தனர்.அதை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், அந்நடவடிக்கையை தற்காலிகமாக கைவிட்டுள்ளனர். ஒரு முகவர் குறைந்தபட்சம், 50 லிட்டர் அளவுக்கு வர்த்தகம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள அவர்கள், தனியார் பால் நிறுவனத்தோடு இணைந்து செயல்படும் முகவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.இது குறித்து, கோவை ஆவின் நிறுவன பொது மேலாளர் ஜெயகுமார் கூறியதாவது: ஆவின் நிறுவன பால் வர்த்தகத்தில், பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் உள்ளீடு செய்து வர்த்தகத்தை பாதிப்புக்குள்ளாக்குகின்றன. அதற்கு சில முகவர்கள் காரணமாக இருப்பது, சமீபத்தில் ஆதாரப்பூர்வமாக கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில் ரத்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.ஆவின் நிறுவனத்தின் பால் மற்றும் பாலிலிருந்து தயாரிக்கப்படும் மற்ற பொருட்களின் வர்த்தகம் பாதிப்படையாமல் இருப்பதற்காகவும், வர்த்தக ரீதியான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அந்த முயற்சியின் ஒரு அங்கம்தான், 50 லிட்டருக்கு கீழே பால் வினியோகம் செய்யும் முகவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு. இது உடனடியாக மேற்கொள்ளப்பட மாட்டாது. குறைவாக வர்த்தகம் செய்யும் முகவர்கள், மேலும் வர்த்தகத்தை தொடர வாய்ப்பு அளிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X