பொது செய்தி

தமிழ்நாடு

இந்துஸ்தான் - ஐ.சி.எம்.ஏ.ஐ., இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

Added : செப் 06, 2021
Share
Advertisement
கோவை:அவிநாசி ரோடு, நவஇந்தியாவில் உள்ள, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், அனைத்து வணிகவியல் துறை மற்றும் ஐ.சி.எம்.ஏ.ஐ., நிறுவனம் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், ஐ.சி.எம்.ஏ.ஐ., கோவை மாவட்ட தலைவர் மதனகோபால் கையெழுத்திட்டனர். செயலாளர் பிரியாசதீஷ்பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்லுாரி
 இந்துஸ்தான் - ஐ.சி.எம்.ஏ.ஐ.,  இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை:அவிநாசி ரோடு, நவஇந்தியாவில் உள்ள, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், அனைத்து வணிகவியல் துறை மற்றும் ஐ.சி.எம்.ஏ.ஐ., நிறுவனம் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், ஐ.சி.எம்.ஏ.ஐ., கோவை மாவட்ட தலைவர் மதனகோபால் கையெழுத்திட்டனர். செயலாளர் பிரியாசதீஷ்பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்லுாரி முதல்வர் பொன்னுசாமி கூறுகையில், ''இந்த ஒப்பந்தம் மூலம், வணிகவியல் மற்றும் அது சார்ந்த துறைகளில் பயிலும் மாணவர்கள், மூன்றாண்டு படிப்பது போல், கூடுதலாக, இந்த ஐ.சி.எம்.ஏ.ஐ., பாடப்பிரிவையும் படிக்கலாம். கூடுதலாக இப்பாடப்பிரிவு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு, முதலாமாண்டில் ஐ.சி.எம்.ஏ.ஐ.,ன் அடிப்படை பாடமும், இரண்டாமாண்டில், இன்டர்மீடியேட் பாடப்பிரிவும், மூன்றாமாண்டில், இறுதி பாடப்பிரிவும் நடத்தப்பட்டு, சான்றிதழ் வழங்கப்படும். இப்படிப்பு சி.ஏ., துறை சார்ந்ததாக இருப்பதால், நிறுவனங்களில் ஆடிட்டர், நிதி மேலாளர் உள்ளிட்ட பணி வாய்ப்புகளை பெறலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X