பொது செய்தி

தமிழ்நாடு

சிற்ப பகுதிகளில் கண்காணிப்பாளர் ஆய்வு

Added : செப் 06, 2021
Share
Advertisement
மாமல்லபுரம் : மாமல்லபுரம், சிற்ப பகுதிகளில், சுற்றுலாப் பயணியர் கூட்டம் குறித்து, தொல்லியல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்.மாமல்லபுரத்தில், கொரோனா தடுப்பு ஊரடங்கின்போது, சுற்றுலாவிற்கு தடைவிதித்து, தொல்லியல் சிற்பங்கள் மூடப்பட்டன. தளர்வுகளைத் தொடர்ந்து, சுற்றுலாவிற்கு அனுமதித்து, வார இறுதி நாட்களில், பயணியர் குவிகின்றனர்.தொற்று சூழலில், தொல்லியல் ஊழியர்கள்,

மாமல்லபுரம் : மாமல்லபுரம், சிற்ப பகுதிகளில், சுற்றுலாப் பயணியர் கூட்டம் குறித்து, தொல்லியல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்.

மாமல்லபுரத்தில், கொரோனா தடுப்பு ஊரடங்கின்போது, சுற்றுலாவிற்கு தடைவிதித்து, தொல்லியல் சிற்பங்கள் மூடப்பட்டன. தளர்வுகளைத் தொடர்ந்து, சுற்றுலாவிற்கு அனுமதித்து, வார இறுதி நாட்களில், பயணியர் குவிகின்றனர்.தொற்று சூழலில், தொல்லியல் ஊழியர்கள், பயணியரை, வழிகாட்டு முறைகளை பின்பற்றி அனுமதிக்கின்றனரா என, தொல்லியல் துறை, பொறுப்பு கண்காணிப்பாளர் விஜயகுமார் சோமசேகரன் நாயர், சிற்ப பகுதிகளில், நேற்று ஆய்வு செய்தார்.முக கவசம் அணியாத பயணியரை அனுமதிக்க கூடாது என, ஊழியர்களிடம் அறிவுறுத்தினார்.

குடவரை மண்டப பகுதிகளில், நடைபாதை கடைகள் ஆக்கிரமிப்புகளை, உடனே அகற்ற உத்தரவிட்டு, அகற்றப்பட்டது.பயணியர், 'ஆன்லைன்' நுழைவுச்சீட்டை, எளிதில் பதிவிறக்க இயலாத சிக்கலை, அவரிடம் தெரிவித்து, நுழைவுச்சீட்டை கவுன்டரில் வழங்க வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X