பொது செய்தி

தமிழ்நாடு

சமூக பாதுகாப்பு துறை சார்பில் கிளை சிறைகளில் ஆய்வு

Added : செப் 06, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : சமூக பாதுகாப்புத் துறை சார்பில், மாவட்டத்தில் கிளை சிறையில், 18 வயதிற்குட்பட்டவர்கள் உள்ளனரா என ஆய்வு செய்யப்பட்டன.காஞ்சிபுரத்தில் குழந்தைகள் பாதுகாப்பு துறை, தேசிய ஆணையம் மற்றும் தமிழக அரசு பாதுகாப்பு துறை சார்பில், மாநிலத்தில் உள்ள கிளை சிறைகளில், 18 வயதிற்குட்பட்டவர்கள் உள்ளார்களா என, ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.இதை

காஞ்சிபுரம் : சமூக பாதுகாப்புத் துறை சார்பில், மாவட்டத்தில் கிளை சிறையில், 18 வயதிற்குட்பட்டவர்கள் உள்ளனரா என ஆய்வு செய்யப்பட்டன.

காஞ்சிபுரத்தில் குழந்தைகள் பாதுகாப்பு துறை, தேசிய ஆணையம் மற்றும் தமிழக அரசு பாதுகாப்பு துறை சார்பில், மாநிலத்தில் உள்ள கிளை சிறைகளில், 18 வயதிற்குட்பட்டவர்கள் உள்ளார்களா என, ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து, ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு துறை சார்பில் ஆய்வு செய்தனர்.சிறை கண்காணிப்பாளர்முன்னிலையில் இந்த ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வில், காஞ்சிபுரம் மாவட்ட பணிக் குழு, குழந்தைகள் நல குழும உறுப்பினருமான சக்திவேல் இளைஞர் நீதி குழும உறுப்பினர் ஆரோக்கிய ராஜ், சைடுலைன் ஒருங்கிணைப்பாளர் கிருபாகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். சிறையில், 18 வயதிற்குட்பட்டவர்கள் யாரும் இல்லை என உறுதி செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X