பொது செய்தி

தமிழ்நாடு

இளநீர் விலை குறையவில்லை

Added : செப் 06, 2021
Share
Advertisement
ஆனைமலை:பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதி விவசாயிகள், இளநீர் பண்ணை விற்பனை விலையை, 28 ரூபாயாக நிர்ணயித்துள்ளனர்.தமிழகம் மற்றும் வடமாநில பகுதிகளில், இளநீருக்கான தேவை அதிகமுள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீர், கர்நாடகா, மும்பை, புதுடில்லி என, நாடு முழுக்க விற்பனைக்காக, இளநீர் அனுப்பப்படுகிறது.தேவை அதிகரித்து வருவது மற்றும் இளநீர் வரத்தில் பெரும் மாற்றம் இல்லாததால், இந்த வாரம்

ஆனைமலை:பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதி விவசாயிகள், இளநீர் பண்ணை விற்பனை விலையை, 28 ரூபாயாக நிர்ணயித்துள்ளனர்.தமிழகம் மற்றும் வடமாநில பகுதிகளில், இளநீருக்கான தேவை அதிகமுள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீர், கர்நாடகா, மும்பை, புதுடில்லி என, நாடு முழுக்க விற்பனைக்காக, இளநீர் அனுப்பப்படுகிறது.தேவை அதிகரித்து வருவது மற்றும் இளநீர் வரத்தில் பெரும் மாற்றம் இல்லாததால், இந்த வாரம் விலையில் மாற்றமில்லை. ஒரு வீரிய ஒட்டுரக இளநீர் பண்ணை விற்பனை விலை, 28 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எடைக்கு விற்பனை செய்தால் ஒரு டன் இளநீர், 11 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யலாம்.தொடர்ந்து ஒரு மாதமாக விலை குறையாமல் உள்ளது. விவசாயிகள் விலையை குறைந்து விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும்.தேவை அதிகரிப்பதால் வரும் வாரத்தில் விலை உயர வாய்ப்புள்ளதாக, ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X