பொது செய்தி

தமிழ்நாடு

ரயில் பாதையில் பாயும் 25,000 வோல்ட் மின்சாரம்: அசம்பாவிதம் தவிர்க்க ரயில்வே நிர்வாகம் அறிவுரை

Added : செப் 06, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி;பொள்ளாச்சி - போத்தனுார் ரயில் வழித்தடம் மின்மயமாக்கப்பட்டுள்ள நிலையில், மின்பாதையில், 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாயத்துவங்கியுள்ளது. இதனால், மின்பாதை அருகில் மக்கள் செல்லக்கூடாது, என, பாலக்காடு கோட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.பொள்ளாச்சி - போத்தனுார் மின்மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்று, கடந்த, 1ம் தேதி மின்ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில்,

பொள்ளாச்சி;பொள்ளாச்சி - போத்தனுார் ரயில் வழித்தடம் மின்மயமாக்கப்பட்டுள்ள நிலையில், மின்பாதையில், 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாயத்துவங்கியுள்ளது. இதனால், மின்பாதை அருகில் மக்கள் செல்லக்கூடாது, என, பாலக்காடு கோட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.பொள்ளாச்சி - போத்தனுார் மின்மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்று, கடந்த, 1ம் தேதி மின்ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், ரயில் மின்பாதையில், உயர் மின்னழுத்த திறனான, 25,000 வோல்ட் மின்சாரம் பாயத்துவங்கியுள்ளது.இதனால், மின் பாதையில் இருந்து, குறைந்தது, இரண்டு மீட்டர் தொலைவை கடைப்பிடிப்பது பாதுகாப்பானது. மின் தளவாடங்கள், மின்கடத்திகள், மின்கம்பிகள் அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவது, நேரடியாகவோ, வேறு பொருட்களை கொண்டோ தொட முயற்சிப்பது, ரயில் பாதையில் விளையாடுவது, கால்நடைகள் மேய்ப்பது ஆபத்தானது. இளைஞர்கள் விளையாட்டாக 'செல்பி' எடுக்க, மின்ரயில் பெட்டிகள், இன்ஜின் மீதும் ஏறியதால், பல மரணங்கள் சம்பவித்துள்ளன. எனவே, அது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.மழை காலங்களில், இடி, மின்னல் சமயங்களில், குடையை விரித்தபடி, ரயில் மின்பாதையின் கீழும், அருகிலும் நடப்பது ஆபத்தை விளைவிக்கும். அதே போல், ரயில் மின் தளவாடங்கள், மின் கம்பி உள்ளிட்டவை மீது விளையாட்டாக பொருட்களை வீசுவதும் ஆபத்தை ஏற்படுத்தும்.ரயில்வே கேட்களை கடக்கும் போதும், உயரமாக பாரம் ஏற்றிச் செல்வது அசம்பாவிதங்களை ஏற்படுத்தும். இனிமேல், அவ்வப்போது மின்ரயில் சோதனை ஓட்டங்கள் நடத்தப்படும் என்பதால், ரயில் பாதையில் உலவுவது, கடக்க முயற்சிப்பதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, பாலக்காடு கோட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X