பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கொரோனா டெஸ்ட்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கொரோனா 'டெஸ்ட்'

Updated : செப் 06, 2021 | Added : செப் 06, 2021
Share
பொள்ளாச்சி:பொள்ளாச்சி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட பள்ளி, கல்லுாரிகளில், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், கடந்த, 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு 9, 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் நடக்கிறது. உரிய சமூக இடைவெளி பின்பற்றி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. முகக்கவசம் அணிதல், சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்தல்
 பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கொரோனா 'டெஸ்ட்'

பொள்ளாச்சி:பொள்ளாச்சி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட பள்ளி, கல்லுாரிகளில், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், கடந்த, 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு 9, 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் நடக்கிறது. உரிய சமூக இடைவெளி பின்பற்றி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. முகக்கவசம் அணிதல், சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.இந்நிலையில், மாணவர்களுக்கு அறிகுறிகள் உள்ளதா என கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.அதில், நேற்று முன்தினம் கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவியர், ஆசிரியர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், மாணவ, மாணவியர், பேராசிரியர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. நகரத்தில் தினமும், 200 பேருக்கும்; தெற்கு, வடக்கு ஒன்றியங்களில் தலா, 150 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.கடந்த, இரண்டு நாட்களில் மட்டும், ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X