பொது செய்தி

தமிழ்நாடு

துார்வாரியும் பயனில்லாத களரி கண்மாய்

Added : செப் 06, 2021
Share
Advertisement
உத்தரகோசமங்கை,--கடந்த இரு வருடங்களுக்கு முன்பு கண்மாய் பாசன பொதுப்பணித்துறை அதிகாரிகளால் குடிமராமத்து செய்யப்பட்ட களரி கண்மாயில் துார்வாரியும் எவ்வித பயனும்இல்லை, என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.உத்தரகோசமங்கை அருகே களரி கண்மாய் அமைந்துள்ளது. 950 ஏக்கர் பரப்பளவு கொண்ட களரி கண்மாயை நம்பி குளபதம், நத்தம், வேளானுார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களின் விவசாய

உத்தரகோசமங்கை,--கடந்த இரு வருடங்களுக்கு முன்பு கண்மாய் பாசன பொதுப்பணித்துறை அதிகாரிகளால் குடிமராமத்து செய்யப்பட்ட களரி கண்மாயில் துார்வாரியும் எவ்வித பயனும்இல்லை, என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

உத்தரகோசமங்கை அருகே களரி கண்மாய் அமைந்துள்ளது. 950 ஏக்கர் பரப்பளவு கொண்ட களரி கண்மாயை நம்பி குளபதம், நத்தம், வேளானுார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களின் விவசாய நிலங்கள் அமைந்துள்ளது.வைகையில் இருந்து வரக்கூடிய உபரிநீர் உத்தரகோசமங்கை நிறைந்த பிறகு, உத்தரகோசமங்கையில் இருந்து பிரிந்து வரக்கூடிய வரத்துகால்வாய் நீர் அதிகமாகி சேரும் வகையில் அக்காலத்தில் நீர் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு குடிமராமத்து செய்யப்பட்டதில் கரைகள் பலப்படுத்தப்பட்டு, பக்கவாட்டில் பெயரளவிற்கு பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது.

குளபதம், நத்தம், வேளானுார் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லக்கூடிய வரத்து கால்வாய் இடித்து அகற்றப்பட்டு புதிதாக எழுப்பப்பட்டதுபுதிய வரத்துக்கால்வாய் கட்டப்படும் அதைச் சுற்றிலும் நீர் செல்லும் வழித்தடத்தில் மண், சகதி உள்ளிட்டவைகளால் மழை காலங்களில் நீர் பாசனத்திற்கு செல்ல வழியில்லாமல் உள்ளது.

சுமைதாங்கி கிராமத்தைசேர்ந்த விவசாயி சந்திரன் கூறியதாவது:இப்பகுதியில் நெல், மிளகாய், பருத்தி, சிறுதானியம், வெங்காயம், கத்தரிக்காய் உள்ளிட்டவைகள் சாகுபடி செய்யப்படுகிறது. களரி கண்மாயில் இருந்து வெளியேறக் கூடிய கலுங்கு பகுதியில் ஷட்டர் சேதமடைந்துஉள்ளதால், விவசாயத்திற்கான பாசன நீர் செல்வதில் சிக்கல் நிலவுகிறது.எனவே பொதுப்பணித் துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் கண்மாய் பகுதியை ஆய்வு செய்து மழைக்காலத்திற்கு முன்பாக குறைகளை நிவர்த்தி செய்தால் நுாற்றுக்கணக்கான விவசாய நிலங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X